[X] Close
 

நீங்கள்தான் என் கடைசி நம்பிக்கை: மோடிக்கு ஒரு வீராங்கனையின் உருக்கமான கடிதம்


manipur-weightlifter-writes-to-pm-seeks-truth-behind-her-doping-case

  • பாரதி
  • Posted: 09 Aug, 2018 13:29 pm
  • அ+ அ-

பளுதூக்கும் சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த சஞ்சிதா சானு மிக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அதை ட்வீட் செய்து அதில் பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மணிப்பூர் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் மற்றும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோரை டேக் செய்திருக்கிறார்.

2014 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வென்றுகொடுத்தவர் சஞ்சிதா சானு. அண்மையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியிலும் 53 கிலோ எடை பிரிவில் பளுதூக்கி தங்கம் வென்றார் சஞ்சிதா. ஆனால், மே மாதம் சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு சஞ்சிதாவை நீக்குவதாக அறிவித்தது. 2017 நவம்பர் 18-ல் அமெரிககவில் நடந்த ஐடபிள்யுஎஃப் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட அவரது சிறுநீர் மாதிரியில் டெஸ்டோஸ்டீரான் என்ற தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு கழிவு இருந்ததாகக் கூறி சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு சஞ்சிதாவை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து உருக்கமான ஒரு கடிதத்தை பதிவு செய்துள்ள சஞ்சிதா பிரதமர் மோடி தலையிட்டு இவ்விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர உதவ வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

"நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். மணிப்பூர் எனது சொந்த மாநிலம். நிறைய தடைகளைத் தாண்டி நான் இந்த நிலையை அடைந்துள்ளேன். எனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரே ஒரு கனவை நோக்கி நகர்த்தியிருக்கிறேன். சர்வதேச அரங்குகளில் என்னால் மூவர்ணக் கொடி பறக்க வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக 12 ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். ஆனால், டோபிங் குற்றச்சாட்டு என் கனவை சிதைத்துவிட்டது.
நீங்கள்தான் எனது கடைசி நம்பிக்கை. எனது விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய உதவுங்கள். எனக்கு நீதி கிடைக்க உதவுங்கள். எனது சிறுநீர் மாதிரியின் டிஎன்ஏ பரிசோதனை செய்தாலே உண்மை விளங்கிவிடும்" எனக் கடிதத்தில் சஞ்சிதா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close