பாரிஸ் ஒலிம்பிக்: லக்‌ஷயா சென் ஏமாற்றம்


பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் லக்‌ஷயா சென், டென்மார்க் வீரரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.

இதில் விக்டர் அக்சல்சென் 22-20, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதியில் தோல்வி கண்ட லக்‌ஷயா சென், இன்று நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதவுள்ளார்.

x