[X] Close
 

விராட் தான் கிங்!- கெவின் பீட்டர்சன் புகழாரம்


virat-is-the-king

  • பாரதி
  • Posted: 03 Aug, 2018 12:27 pm
  • அ+ அ-

இங்கிலாந்து டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து சாதனை படைத்ததோடு தன் மீதான  விமர்சனங்களை எல்லாம் உடைத்தெறிந்து இருக்கிறார்.

அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விராட்தான் ராஜா" என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தோனியை கேப்டன் கூல் என அழைத்தது போல் விராட் கோலியை ரசிகர்கள் கிங் கோலி என்றே அழைக்கின்றனர். அதை உள்வாங்கிக் கொண்டே கெவின் பீட்டர்சன்னும் கோலியை கிங் என்று பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முழுதும் விராட் கோலிக்குச் சொந்தமானது. 225 பந்துகளில் 22 பவுண்டரிகள் 1 சிக்சருடன் விராட் கோலி 149 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆதில் ரஷீத்திடம் ஆட்டமிழந்தார். இந்திய அணி 169/7 என்ற நிலையிலிருந்து கோலியின் உலகத்தரம் வாய்ந்த சத இன்னிங்ஸினால் கடைசியில் இங்கிலாந்து ஸ்கோருக்கு நெருக்கமாக வந்து 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் சொதப்பியதாக அதிகம் விமர்சிக்கப்பட்ட கோலி, இம்முறை முதல் டெஸ்டிலேயே அதற்கு சரியான பதிலடி கொடுத்து தன்மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close