[X] Close
 

கிரிக்கெட் களத்தில் கலக்கியது போல் அரசியலிலும் கலக்குங்கள்: இம்ரானுக்கு அசாருதீன் அறிவுரை


take-bold-decisions-like-on-field-azharuddin-s-advice-to-imran-khan

  • பாரதி
  • Posted: 28 Jul, 2018 16:16 pm
  • அ+ அ-

பாகிஸ்தானில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தனிப் பெருங்கட்சியாக வாக்கு வங்கியை சேர்த்துள்ளது. ஆனால், அந்தக் கட்சி அரசு அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 

இந்நிலையில் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய காங்கிரஸ் பிரமுகருமான அசாருதீன், "ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நாட்டின் பிரதமராவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இது ஓர் அரிய நிகழ்வு. வாழ்த்துகள்" எனக் கூறியிருக்கிறார்.

அதே வேளையில், இம்ரான் கானுக்கு சில அறிவுரைகளையும் அவர் கூறியிருக்கிறார்.

"இம்ரான் கான், நீங்கள் கிரிக்கெட் ஆடுகளத்தில் எடுத்த முடிவுகள் எல்லாம் நேர்மறையானதாக மிகவும் துணிச்சலானதாக தனித்துவம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. அதேபோல் தேசத்தை வழிநடத்துவதிலும் துணிச்சலான முடிவுகளை எடுங்கள். ஆனால், சற்று பொறுமையும் அவசியம். தேசத்தை வழிநடத்துவம் ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதும் வெவ்வேறு" என அசாருதீன் அறிவுரை கூறியிருக்கிறார்.

இம்ரான் கான் பிரதமரானால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில் நிலவும் சர்ச்சைகள் நீங்குமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, "முதலில் அவர் சில பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது. அதன் பின்னர்தான் இவையெல்லாம் சாத்தியமாகும்.

அதேபோல் வெறுப்பை விதைத்துக்கொண்டும் எல்லைக்குள் ஊடுருவலை நடத்திக் கொண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமல்ல. முதலில் ஊடுருவல்கள் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை நடைபெறும்" எனக் கூறினார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close