[X] Close

இணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை


virat-kohli-left-surprised-by-adil-rashid-ripper-in-3rd-england-odi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jul, 2018 14:56 pm
  • அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது திடீரென அவுட் ஆன கோலி காட்டிய முகபாவனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்று, தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. 
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி, 72 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார். 36-வது ஒருநாள் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அந்தப் பந்து, ஆஃப் ஸ்டம்பின் முனையில் பட்டதால் விக்கெட்டை இழந்தார். இதை எதிர்பாராத கோலி திகைத்துப்போனார். அப்போது அவர் முகத்தில் காட்டிய அந்த பாவனை தற்போது வைரலாகி வருகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 9 ஒருநாள் தொடர்களை இழக்காமல் வெற்றி நடைபோட்டு வந்தது. அதற்கு முதல் முறையாக "பிரேக்" போட்டுள்ளது இங்கிலாந்து அணி.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close