[X] Close

தோனிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை இறக்கியது ஏன்? சஞ்சய் மஞ்சுரேக்கரின் யூக விளக்கம்


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 17:35 pm
  • அ+ அ-

மான்செஸ்டர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் இலக்கை விரட்டுதலில் திணறி வருகிறது.

 

இதில் 3ம் நிலையில் கோலி, 4ம் நிலையில் பந்த், 5ம் நிலையில் தோனி இறங்க வேண்டும், ஆனால் கார்த்திக் இறக்கப்பட்டார், சரி 6ம் நிலையிலாவது தோனி இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஹர்திக் பாண்டியா இறக்கப்பட்டார்.

 

இந்நிலையில் ரிஷப் பந்த் தனக்கு விட்ட கேட்சை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தாமல் 32 ரன்கள் எடுத்து சாண்ட்னரை ஸ்லாக் ஸ்வீப் ஆடி டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போதுதான் தோனி இறக்கப்பட்டார்.

 

பொதுவாக சூழ்நிலைக்கு ஏற்ப தோனி 5, 6, அல்லது 7ம் நிலையில் இறக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் ட்வீட் பதிவில் பாண்டியா ஏன் தோனிக்கு முன்பாக இறக்கப்பட்டார் என்பது குறித்து யூகமாகவும் சற்றே நையாண்டி கலப்பு தொனியுடனும் பதிவிட்டுள்ளார்.

 

அதில், “சரி, தோனிக்கு முன்பாக பாண்டியா ஏன் இறக்கப்பட்டார் என்று நான் யூகம் செய்ய முயற்சிக்கிறேன். தாக்குதல் ஆட்டமா? தடுப்பாட்டமா என்ற தெரிவில் விராட் கோலி எப்போதும் தாக்குதல் ஆட்ட தெரிவையே மேற்கொள்வார். அதனால்தான் தோனிக்கு முன்பாக பாண்டியா இறக்கப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close