[X] Close

தோனியின் மந்தமான பேட்டிங் பற்றி பேசினீர்களா? - செய்தியாளர்கள் கேள்விக்குப் பவுலிங் கோச் பாரத் அருண் மழுப்பல் பதில்


  • kamadenu
  • Posted: 26 Jun, 2019 21:52 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் பேட்டிங் தேவைப்படும் நேரத்தில் சோபிக்காமல் மிகவும் மந்தமான ஆட்டமாகப் போனது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது.

 

பொதுவாக தோனி மெதுவாகத் தொடங்கி தான் எப்போது வேண்டுமானாலும் பவுண்டரி, சிக்சர்கள் அடிப்பேன் என்ற ரீதியில் செல்வார், ஆனால் சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆடுகிறார் என்றால் அந்த நிலையில் ஒரு சீனியர் அதிரடி பேட்ஸ்மென் அடித்து ஆடி எதிராளிக்கு அச்சமூட்டியிருக்க வேண்டும், அதை விடுத்து 1975 உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர் இங்கிலாந்துடன் ஆடியதுடன் போட்டி போடலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பவுலிங் கோச் பாரத் அருணிடம் தோனியிடம் யாராவது மந்தமான பேட்டிங் பற்றி கேட்டீர்களா, விவாதித்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர்,

 

“விராட் கோலியுடன் தோனியின் பேட்டிங்கை ஒப்பிடுவது சரியாகாது, ஏனெனில் கோலி அனைத்து வடிவங்களிலும் நம்பர் 1 பேட்ஸ்மேன், எனவே அவரது ஸ்ட்ரைக் ரேட்டுடன் தோனியை ஒப்பிடுவது சரியாகாது.

 

தோனி மட்டுமல்ல அனைத்து பேட்ஸ்மென்களிடமும் சீராக உரையாடி வருகிறோம், உதவிப் பணியாளர், பேட்டிங் கோச், தலைமை பயிற்சியாளர்  ரவிசாஸ்திரி சீரான முறையில் அனைத்து பயிற்சியாளர்களிடமும் பேசி வருகிறார். ஆனால் என்ன விவாதித்தோம் என்பதையெல்லாம் கூறுவதற்கில்லை, ஆனால் ஆமாம், உங்கள் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டுமெனில் மேம்பட வேண்டும் என்பதற்காக சீரான முறையில் உரையாடல் வீரர்களுடன் இருந்து வருகிறது.

 

சூழ்நிலைக்குத் தக்கவாறு, பிட்சுக்குத் தக்கவாறு அன்று அவர் ஆடினார். நம்மால் வெற்றிகரமாக அந்த இலக்கை தடுக்க முடிந்துள்ளது. ஆனால் விக்கெட்டுகளை இழந்ததால் வேறுமாதிரி ஆனது, அவரது பேட்டிங் பற்றி இப்போது பெரிய கவலையெல்லாம் இல்லை.

 

முதல் 3 போட்டிகளில் பெரிய ஸ்கோரை எடுத்தோம், ஆப்கான் மேட்சில் பிட்சில் பந்து கொஞ்சம் நின்று வந்தன.  அந்தச் சூழ்நிலையில் பேட் செய்வது கொஞ்சம் தந்திரோபாயமானது.  சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளல்தான் அனைத்தும்.

 

என்று தோனியிடம் அவரது மந்தமான பேட்டிங் பற்றி யாராவது பேசினீர்களா என்றால் ஏதேதோ மழுப்பி சுற்றி வளைத்தார் பாரத் அருண்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close