[X] Close

மே.இ.தீவுகளுக்கு மேலும் பின்னடைவு: அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் உ.கோப்பையிலிருந்து விலகல்


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 20:50 pm
  • அ+ அ-

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள மே.இ.தீவுகள் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் விலகியுள்ளதால் மே.இ.தீவுகளுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

நியூஸிலாந்துக்கு எதிரான அந்த பிரமாதமான ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸல் பின் தொடை தசைநார் பிரச்சினை காரணமாக ஆட முடியவில்லை. ஆனால் அவருக்கு முழங்கால் பிரச்சினையும் இருந்து வந்தது. இந்நிலையில் முழங்கால் காயம் காரணமாக அவர் இனி உலகக்கோப்பை போட்டியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

 

ஆந்த்ரே ரஸலுக்கு பதிலா சுனில் அம்ப்ரீஸ் என்ற வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த உலகக்கோப்பையில் ஆந்த்ரே ரஸல் இங்கிலாந்துக்கு எதிராக 2 ஓவர்களே வீசினார். வங்கதேசத்துக்கு எதிராக 6 ஓவர்கள் வீசினார்.

 

நியூசிலாந்துக்கு எதிராக இதனால் ஆட முடியவில்லை. இவருக்குப் பதிலாக கார்லோஸ் பிராத்வெய்ட் உள்ளே வந்து ரஸல் வேலையை இன்னும் திறம்படச் செய்தார். திகைப்பூட்டும் சதம் அடித்தார் நியூஸிலாந்துக்கு மரண பீதி காட்டினார், ஆனால் கடைசியில் 5 இஞ்ச் கேட்சில் அவுட் ஆக 5 ரன்களில் மே.இ.தீவுகள் வேதனைத் தோல்வி அடைந்தது.

 

கெய்ரன் போலார்ட், டிவைன் பிராவோ ஆகியோரும் உள்ளனர், ஆனால் சுனில் அம்ப்ரீஸ் என்ற தொடக்க வீரரைத் தேர்வு செய்து வைத்துள்ளனர். எவின் லூயிஸும் காயத்தின் பிடியில் இருப்பதால் அவரும் வெளியேற வாய்ப்பிருப்பதால் தொடக்க வீரரை தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close