ஷரத் கமலுக்கு கேல் ரத்னா; பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா


ஷரத் கமல்

நடப்பாண்டுக்கான விளையாட்டு துறையின் தேசிய அளவிலான உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டேபிள் டென்னிஸ் வீரரான ஷரத் கமல், தியான் சந்த் கேல் ரத்னா விருது பெறுகிறார். தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா மற்றும் இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோர் அர்ஜூனா விருது பெறுகின்றனர்.

நாட்டின் மிக உயரிய விளையாட்டுத் துறை விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினை இந்த வருடம் பெறும் ஒரே வீரராக டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் சிறப்பு பெறுகிறார்.

பிரக்ஞானந்தா

அர்ஜூனா விருதினை இவ்வருடம் மொத்தம் 25 வீரர்கள் பெறுகின்றனர். சீமா புனியா உள்ளிட்ட 3 தடகள விளையாட்டு வீரர்கள், லக்‌ஷ்யா சென் உள்ளிட்ட 2 பேட்மிட்டன் வீரர்கள், அமித் உள்ளிட்ட 2 பாக்ஸிங் வீரர்கள் என அர்ஜூனா வீரர்களின் பட்டியல் நீள்கிறது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரரான பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீரரான இளவேனில் வாலறிவன் ஆகியோரும் அர்ஜூனா விருது பெறுகிறார்கள். இவை தவிர்த்து துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளவேனில்

நவம்பர் 30 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதாளர்களுக்கு உரிய விருதினை வழங்கி கௌரவிக்கிறார்.

x