[X] Close

'ஆப்கனுடன் கடினமாகப் போராடி பெற்ற வெற்றி முக்கியமானது' : விராட் கோலி பெருமிதம்


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 13:09 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் கடினமாகப் போராடி வெற்றி மிகவும் முக்கியமானது,இப்போதுள்ள சூழலில் தேவையானது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதம் அடைந்தார்.

சவுத்தாம்டன் நகரில் நேற்று இடையிலான உலகக் கோப்பை லீ்க் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 225ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியி்ல இந்திய அணி வீரர் சேட்டன் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தபின் அதன்பின் 22 ஆண்டுகளுக்குப்பின் ஷமி எடுத்து சாதனை புரிந்தார்.

கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியை வெல்வதற்கு இந்திய அணியினர் அதிகம் மெனக்கட்டார்கள். தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு மரண பயத்தை ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் காட்டிவிட்டார்கள்.

virat-kohl.jpeg 

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நாங்கள் திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை. ஆதலால், நம்முடைய முழுத்திறனையும் பயன்படுத்தும்போதுதான் உயரே எழ முடியும்.

அந்தவகையில் இந்த வெற்றி கடனமான உழைப்புக்குப்பின் கிடைத்த வெற்றிதான். இப்போதுள்ள சூழலில் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு இந்த வெற்றி அவசியமானதுதான்.

ஒவ்வொருவரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். ஷமி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாகப் பந்துவீசினார். பேட்ஸ்மேன்கள் ஷமியின் பந்துவீச்சை ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள் என்பது நன்கு தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் ஆடுகளமும் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

நாங்கள் டாஸ்வென்ற முதலில் பேட் செய்ய நினைக்கும்போது, 260 முதல் 270 ரன்கள்வரை எளிதாக அடித்துவிடுவோம் என்றுதான் நினைத்தோம். அவ்வாறு இருந்திருந்தால், நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால், எதுவுமே திட்டமிட்டபடி நடக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆடுகளத்தில் கிராஸ்பேட் மூலம் ஷாட்கள் ஆடுவது மிகக் கடினமாக இருந்தது. ஆனால், அதேநேரத்தில் ஸ்ட்ரைட் டிரைவ் ஷாட்கள் ஆடுவது எளிதாக இருந்தது. இதைக் கண்டறியவே எங்களுக்கு நீண்டநேரம் ஆனது.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close