[X] Close

பெண் செய்தியாளருக்கு முத்தம் கொடுத்த கால்பந்து ரசிகர்: வைரலாகும் வீடியோ


colombian-journalist-gets-groped-kissed-on-live-tv

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jun, 2018 13:49 pm
  • அ+ அ-

கால்பந்து ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு எல்லையே இல்லை. ஒரு சில நேரங்களில் அவர்கள் எல்லை மீறும்போது சர்ச்சைகள் வெடிக்கின்றன.

அந்த வகையில் கொலம்பிய பெண் பத்திரிகையாளர் ஒருவர் கால்பந்து செய்தியை நேரலையில் சொல்லிக் கொண்டிருக்கும்போது பின்னால் நின்ற கால்பந்து ரசிகர் ஒருவர் அந்தப் பெண் செய்தியாளரை தன்வசம் இழுத்து முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையக் கிளப்பியுள்ளது.

இது குறித்து தி சன் பத்திரிகை, "ஜெர்மன் தொலைக்காட்சியான டட்ஷே வெல்லின் செய்தியாளர் ஜூலியத் கோன்சேலஸ் தெரான், ரஷ்யாவின் புகழ்பெற்ற சரான்ஸ்க் மைதானத்தின் முன்னால் நின்றபடி செய்தியை சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது கால்பந்து ரசிகர் ஒருவர் அந்த செய்தியாளருக்கு முத்தம் கொடுத்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள செய்தியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அத்துமீறல் வீடியோவைப் பகிர்ந்து, "மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். எங்களை இப்படி நடத்தாதீர்கள். நாங்கள் மதிப்புமிக்க தொழிலைச் செய்கிறோம். கால்பந்து ரசிகர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை நான் மதிக்கிறேன். ஆனால், நேசத்துக்கும் அத்துமீறலுக்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிந்துகொள்ளுங்கள்" எனக் கொந்தளித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.

தெரானின் இன்ஸ்டாகிராம் வீடியோவின் கீழும் பலர் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். ஃபிபா கொண்டாட்டம் ஒரு பெண்ணிடம் அத்துமீறுவதற்கான அடையாளச்சீட்டு அல்ல என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close