தாய்லாந்து பாட்மிண்டன்: இந்திய ஜோடி சாம்பியன்


பாங்காக்: தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

தாய்லாந்தின் பாங்காக்கில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் சாட்விக்-சிராக் ஜோடி, சீனாவின் சென் போ யாங், லியு யிஜோடியுடன் மோதியது.

இதில் சாட்விக்-சிராக் ஜோடி 21-15, 21-15 என்ற புள்ளிகள்கணக்கில் சென் போ யாங், லியு யி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்த ஆண்டில் சாட்விக்-சிராக் ஜோடி பெறும் 2-வது பட்டமாகும் இது. இதற்கு முன்புகடந்த மார்ச்சில் நடைபெற்றபிரெஞ்சு ஓபனிலும் இந்த ஜோடி பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.