[X] Close

கோலி மாதிரி நீங்கள் ஜென்டில்மேனா?- வில்லியம்ஸனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்: தெ.ஆப்பிரிக்க வீரர் கேள்வி


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 14:40 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்.

கோலி மாதிரி நீங்கள் நீங்கள் ஜென்டில்மேன் இல்லை என்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸும், 'வில்லியம்ஸன் அவுட் எனத் தெரிந்தபின்பும் வெளியேறாதது ஜென்டில்மேன் செயலா' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிர்மிங்ஹாமில் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து நியூஸிலாந்து அணி மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 138 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். இவருக்கு உறுதுணையாக கொலின் டி கிராண்ட்ஹோம் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனால், இந்த ஆட்டத்தில் இம்ரான் தாஹிர் வீசிய 38-வது ஓவர் இப்போது சர்ச்சையாகியுள்ளது. இம்ரான் தாஹிர் வீசிய ஓவரில் வில்லியம்ஸன் பேட்டில் பந்துபட்டு பின்னால் இருந்த விக்கெட் கீப்பர் டீக் காக்கிடம் பிடிபட்டது. பந்து பேட்டில் பட்டுச் சென்ற சத்தம் நன்றாகக் காதில் கேட்டது. ஆனால், விக்கெட் கீப்பர்  டீகாக் நடுவரிடம் முறையிடவில்லை, அதுகுறித்து டிஆர்எஸ் முறைக்கும் முறையிடவில்லை. விக்கெட் கீப்பர் முறையீடு கேட்காததால், கேப்டன் டூப்பிளசிஸ் உள்ளிட்ட மற்ற வீரர்களும் அவுட் இல்லை என நம்பி அமைதியாக இருந்தனர்.

willam.jpg 

ஆனால், டி.வி. ரீப்ளேயில் வில்லியம்ஸன் அடித்த ஷாட்டை திருப்பிப் போட்டுப்பார்த்தபோது, பேட்டில் பந்து பட்டு நன்றாகச் சென்றது தெளிவாகியது. இது வில்லியம்ஸனுக்கும் நன்கு தெரியும், பந்து பேட்டில் பட்டதை பேட்ஸ்மேனும் உணர்ந்திருக்கக் கூடும்.

ஆனால், பேட்டில் பந்துபட்டும், அவுட் எனத் தெரிந்தும், வில்லியம்ஸன் ஏன் வெளியேறவில்லை இப்போது சமூக ஊடகங்களில் பெரும்விவாதப் பொருளாதாக மாறி இருக்கிறது.

ge.PNG 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முகமது அமீர் வீசிய பந்து தலையின் மீது சென்றது. அப்போது அந்தப் பந்தை அடிக்க கோலி முயன்றபோது அது கீப்பர் சர்பிராஸ் அகமதுவிடம் கேட்ச் ஆனது.

ஆனால், நடுவர் அவுட் வழங்கும் முன் அது அவுட் எனத் தெரிந்து கோலி வெளியேறினார். ஆனால், டி.வி.ரீப்ளேயில் அது அவுட் இல்லை, பந்து பேட்டில் படவில்லை என்று தெரிந்தது. இருந்தாலும், பந்து பேட்டில் பட்டுவிட்டது என்று நம்பி, நடுவர் அவுட் வழங்கும் முன் சென்ற கோலியின் ஜென்டில்மேன் குணத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். விராட் கோலி போன்று நீங்கள் ஜென்டில்மேன் இல்லை என்று வில்லிம்ஸனை நெட்டிசன்கள் இகழ்ந்து வருகின்றனர்.

Capture.PNG 

மேலும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ் ட்விட்டரில் கூறுகையில், "பேட்டில் பந்து பட்டபின்பும், ஏன் வில்லியம்ஸன் வெளியேறவில்லை. வில்லியம்ஸன் மான்கட் அவுட் செய்யப்பட்டுமே அவர் வெளியேறவில்லை. இதற்காகவா வருத்தப்படப் போகிறார்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கூறுகையில், "வில்லியம்ஸன் பேட்டில் பந்து பட்டது தெரிந்தும் அவர் வெளியேறவில்லை. இது நேர்மையற்றதனம். தாஹிர் மட்டுமே அப்பீல் செய்தார். நேர்மையான கிரிக்கெட்டுக்கு இடமில்லை" என சிலர் தெரிவித்துள்ளனர்.

v.PNG 

மற்றொருவர் பதிவிட்ட கருத்தில், "தென் ஆப்பிரிக்கா மீண்டும் சோக்கர்கள் ஆனது. வில்லியம்ஸன் அவுட் எனத் தெரிந்தும் சென்றிருக்க வேண்டும். ஸ்பிரிட் ஆப்தி கிரிக்கெட் தோற்றுவிட்டது" எனக் கண்டித்துள்ளனர்.

உலகக்கோப்பை போட்டியின் அழுத்தத்தால் வில்லியம்ஸன் அவுட் எனத் தெரிந்தும் அவர் வெளியேறவில்லை எனச் சிலர் ஆதரவாகத் தெரிவித்துள்ளனர்.

வில்லியம்ஸன் நல்ல வீரர், பந்துபேட்டில்பட்டும் கேட்ச் பிடித்த பின்பும் செல்லவில்லை. ஆனால், இந்திய கேப்டன் கோலி, பேட்டில் பந்து படாமலேயே வெளியே சென்றுவிட்டார் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close