[X] Close

விராட் கோலியை விட ஒரு இன்னிங்ஸ் அதிகம்: ஹஷிம் ஆம்லா 8000 ரன்களைக் கடந்து சாதனை


8000

  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 19:09 pm
  • அ+ அ-

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா ஒருவழியாக தனது 8,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார்.

 

நியூஸிலாந்துக்கு எதிராக 35.2 ஓவர்களில் 147/4 என்று தென் ஆப்பிரிக்கா தடுமாறி வருகிறது மொத்த ரன் விகிதம் 4.16 மட்டுமே. டியூசன் 18 ரன்களுடனும் டேவிட் மில்லர் 2 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். ‘’

 

முன்னதாக ஆப்கானுக்கு எதிராக கிரிக்கெட் மறதியில் ஆடிய ஆம்லா இந்தப் போட்டியில் சிலபல அடிக்க வேண்டிய பந்துகளை பயன்படுத்தி 4 பவுண்டரிகளுடன் 83 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சாண்ட்னர் வீசிய நல்ல பந்தை லேசாக லெக் ஸ்டம்பிலிருந்து ஆங்கிள் பேட்டுடன் பாயிண்டில் தட்டி விட முயன்று பந்தைக் கோட்டை விட பவுல்டு ஆகி வெளியேறினார்.

 

இதில் 176 வது தன் இன்னிங்சில் அவர் 8000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்தார். விராட் கோலிதான் அதிவிரைவு 8000 ரன்கள் சாதனையில் முதலிடம் அவர் 175 இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டினார், ஆம்லா 2வது இடம்.

 

மேலும் ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோருக்கு பிறகு 4வது தென் ஆப்பிரிக்க வீரராக ஆம்லா 8000 ரன்களை எடுத்துள்ளார்.  இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பவுன்சரில் அடி வாங்கிய ஆம்லா 2வது போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close