[X] Close

இந்திய அணிக்கு பின்னடைவு: ஷிகர் தவண் உலகக் கோப்பையில் இருந்து நீக்கம்?


  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 16:33 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் காயம் காரணமாக உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

ஷிகர் தவணுக்கு இடதுகை பெருவிரலில் லேசாக ஏற்பட்டிருந்த எலும்பு முறிவு குணமடைய நீண்டநாட்கள் ஆகும் என்பதால், அவர் நடப்பு உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட உள்ளார் என அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.  

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஷிகர் தவண் அருமையான சதம் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து தவணின் இடதுகை பெருவிரலில் பட்டு காயம் ஏற்படுத்தியது. போட்டியின் முதலுதவி எடுத்துக்கொண்டு விளையாடிய ஷிகர் தவணுக்கு அதன்பின் மருத்துவப பரிசோதனை செய்யப்பட்டது.

shikhar-dhaw.jpg 

அந்த சோதனையின் முடிவில் ஷிகர் தவணின் இடதுகை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், அடுத்த 3 போட்டிகளுக்கு அவர்ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஷிகர் தவணுக்கு பதிலாக அவசரமாக, இளம் வீரர் ரிஷப் பந்த் அழைக்கப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஷிகர் தவணின் உடல்நிலைகுறித்து மட்டும் அணி நிர்வாகம் வாய் திறக்கமால் இருந்து வந்தது.

 

இந்த சூழலில் ஷிகர் தவணுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், அவர் உலகக் கோப்பையில் இருந்து விலகுவார் என அணிநிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதுகுறித்து அணி நிர்வாகத்தில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில், " ஷிகர் தவணுக்கு ஏற்பட்ட காயம் குணமடைய குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஆகும் அதன்பின் அவர் பீல்டிங், பேட்டிங் செய்ய வேண்டும்.

 

ஆதலால், அவரால் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடமாட்டார். அதற்கான உடல்தகுதியும் இல்லை " எனத் தெரிவித்தார். ஆதலால், ஷிகர் தவண் உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close