[X] Close

உலகக் கோப்பை பாக். தோல்வி: முன்னாள் வீரர்களின் புலம்பல்


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 08:00 am
  • அ+ அ-

வாசிம் அக்ரம்: என்னை பொறுத்தவரையில் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி சரியாக இல்லை. உலகக் கோப்பை தொடருக்கு என்று எந்தவித திட்டத்தையும் பாகிஸ்தான் அணியிடம் என்னால் பார்க்க முடியவில்லை. வெற்றி அல்லது தோல்வி விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால் இதுபோன்ற வழியில் இருக்கக்கூடாது. போராடாமல் தோல்வியடையக் கூடாது.

ஷிகந்தர் பகத்: இதற்கு ஒரே தீர்வு வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் கட்டாயம் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையிலேயே வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் வழங்க வேண்டும்.

முகமது யூசுப்: நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது அது எங்களுக்கு உயர் மதிப்புமிக்க போட்டியாக இருந்தது, நாங்கள் ஒருபோதும் தோற்க விரும்பியதில்லை. ஆனால் தற்போதைய ஆட்டத்தில் கேப்டன் சர்பிராஸ் அகமது மற்றும் வீரர்களின் உடல் மொழியானது நேர்மறை மற்றும் ஆற்றல் மிக்கதாக இல்லை. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விராட் கோலி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்து தவறு செய்தார். அதே தவறை தற்போது சர்பிராஸ் அகமது செய்துள்ளார்.

மோஷின் கான்: இந்திய அணி எவ்வளவு வலிமையாக இருந்தது என்பது எல்லாம் பிரச்சினை இல்லை. உண்மை என்னவெனில் போட்டியில் நாம் வெல்ல முடியும் என்று தங்களை நம்புவதற்கான உந்துதல், ஆற்றல் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இல்லை.

அப்துல் ரஸாக்: திட்டங்களை செயல்படுத்துவதற்கான திறன்கள் இல்லாத வீரர்கள் அணியில் இருந்தால் அவர்களை தூக்கி எறிய வேண்டும். இந்திய அணி விரைவிலேயே காயம் காரணமாக புவனேஷ்வர் குமாரை இழந்தது. ஆனால் மற்ற பந்து வீச்சாளர்கள் தங்களது பணி என்ன என்பதை அறிந்திருந்ததால் புவனேஷ்வர் குமார் இல்லாததை உணரவில்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close