[X] Close

'அடுத்த 3 போட்டிகளுக்கு புவனேஷ்வர் குமார் கிடையாது': விராட் கோலி திட்டவட்டம்


3

  • kamadenu
  • Posted: 17 Jun, 2019 11:32 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்டுவரும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், அடுத்த 2 அல்லது 3 போட்டிகளுக்கு பங்கேற்கமாட்டார் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்ட் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பைப் போட்டி லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த  ஆட்டத்தில் பாகிஸ்தானை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி தோற்கடித்து 7-வது முறையாக உலகக் கோப்பையில் வென்ற அணி எனும் பெருமையை தக்கவைத்தது.

இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் தனது 3-வது ஓவரை வீசியபோது திடீரென கால் இடறி அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. முதல்கட்டமாக முதலுதவி கொடுத்தபோதிலும் அவரால் தொடர்ந்து பந்துவீச இயலாமல் ஓய்வுக்கு சென்றார். அவரின் ஓவரில் மீதமிருந்த 2 பந்துகளை விஜய் சங்கர் வீசினார். அதன்பின் போட்டி முழுவதும்  புவனேஷ்வர் குமார்  பந்துவீசவரவில்லை.

போட்டி முடிந்தபின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

Virat-Kohli.jpg 

வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு காலில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டதால், அவர் போட்டி முழுவதும் பந்துவீச வரவில்லை. அவரின் காயம் குணமடையும் வரை ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால், அவருக்கு பதிலாக அடுத்துவரும் ஆட்டங்களில் ஷமி பந்துவீசுவார்.

புவனேஷ்வர் குமார் அடுத்து 2 முதல் 3 போட்டிகளுக்கு விளையாட மாட்டார். புவனேஷ்வர் குமார் முக்கியம் அணிக்கு முக்கியம், விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்.

ரோஹித் சர்மாவின் பேட்டிங் உண்மையில் மிக அற்புதமாக இருந்தது, ரோஹித்துக்கு ஒததுழைத்து ராகுலும் நன்றாக பேட் செய்து, ஒருநாள் போட்டிக்கு தகுதியான வீரர் என்பதை நிரூபித்து விட்டார். 336 ரன்கள் சேர்த்தது அணியின் ஒட்டுமொத்த உழைப்புதான்.

குல்தீப் யாதவின் பந்துவீச்சு திருப்புமுனையாக இருந்தது. பாபர் ஆசம், பக்கர் ஜமான் இருவரும் ஆட்டத்தை தூக்கி நிறுத்தியபோது, அவர்களை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தியது குல்தீப்.  அதிலும் பாபரை ஆட்டமிழக்கச் செய்த குல்தீப்தின் பந்துவீச்சு அற்புதம். உலகக் கோப்பைப் போட்டியில் குல்தீப்பின் இன்றைய பந்துவீச்சுதான் சிறப்பானது என்று நினைக்கிறேன்.

ind pak.jpg 

எங்கள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணியினர் தோற்கடித்தார்கள், ஆனால், அதற்காக இந்த போட்டியை இந்த போட்டியை மிகுந்த உணர்வுப்பூர்வமாக அனுகினால், அது தவறானது. நாஙகள் எந்த முன்முடிவு வைத்துக்கொண்டும் போட்டியை அனுகவில்லை. நான் தொழில்முறையான கிரிக்கெட் வீரர்கள், எங்களுக்கு முடிவுகள் மட்டுமே முக்கியம் இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

இந்திய அணியில் ஏற்கனவே காயம் காரணமாக ஷிகர் தவண் ஓய்வில் இருக்கிறார், இப்போது 2-வது வீரராக புவனேஷ்வர் குமாரும் ஓய்வுக்கு சென்றுவி்ட்டது சற்று பின்னடைவுதான். இந்திய அணி 22-ம் தேதி நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. 27-ம் தேதி மேற்கிந்தியத்தீவுகள் அணியையும் 30-ம் தேதி இங்கிலாந்துடனும் மோதுகிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close