[X] Close

மழையால் யாருக்கு சாதகம்?-   பாகிஸ்தானுக்கு என்ன இலக்கு நிர்ணயிக்கப்படும்


  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 18:53 pm
  • அ+ அ-

மான்செஸ்டரில் நடந்துவரும் உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

டாஸ்வென்ற பாகிஸ்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.  ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா உலகக் கோப்பையில் 2-வது சதத்தை பதிவு செய்து 140 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக்பாண்டியா 26 ரன்னிலும், தோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

கோலி அரைசதம் அடித்து 76 ரன்னிலும், விஜய் சங்கர் 3 ரன்னிலும் களத்தில் இருந்தனர். 46.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் இந்திய அணி சேர்த்திருந்தபோது மழை குறுக்கி்ட்டதால், ஆட்டம் தடைப்பட்டது.

இப்போதுள்ள நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது எந்த அணிக்கு சாதகமாகும்  என்று பார்க்கலாம். இப்போதுள்ள நிலையில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்யாவிட்டால் பாகிஸ்தானுக்கு 46 ஓவர்களி்ல 327 ரன்கள் இலக்கு வைக்கப்படும்.

அல்லது மழை தொடர்ந்து பெய்தால், போட்டி 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டால். பாகிஸ்தானுக்கு இலக்கு 184 ரன்களாகக் குறைக்கப்படும்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close