[X] Close

டாஸ் வென்றது பாகிஸ்தான்: விஜய் சங்கருக்கு வாய்ப்பு: ஆடுகளத்தின் தன்மை எப்படி?


  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 14:58 pm
  • அ+ அ-

மான்செஸ்டரில் சற்றுநேரத்தில் தொடங்க உள்ள உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டம் இன் ஓல்டுடிராபோர்ட் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

டாஸ்வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இமாத் வாசிம், சதாப் கான் ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய அணியில் காயமடைந்த ஷிகார் தவணுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வகையில் இந்திய அணியில் மாற்றமில்லை.

idndis.jpg 

ஆடுகளம் எப்படி:

மான்செஸ்டர் நகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், ஆடுகளம் மூடி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், ஆடுகளத்தில் மேற்புறத்தில் லேசான ஈரப்பதம் இருக்கும். இந்த மேல்புற ஈரப்பதம் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

ஆனால், ஆடுகளத்தின் நடுப்பகுதி நன்கு காய்ந்து இருப்பதால், முதல்கட்ட இடைவேளைக்குப்பின் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு எடுக்கும் என்பதால், பாகிஸ்தான் அணியில் இரு சுழற்பந்துவீ்ச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக்  பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தான் அணி விவரம்:

இமாம் உல் ஹக், பக்கர் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹபீஸ், சர்பிராஸ் அகமது(கேப்டன்), ஷோயிப் மாலிக், இமாத் வாசிம், சதாப் கான், வகாப் ரியாஸ், ஹசன் அலி, முகமது அமீர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close