[X] Close

கைவிடப்பட்ட போட்டிகளில் 2019 உ.கோப்பை சாதனை: இலங்கை-வங்கதேசப் போட்டியும் ரத்து


2019

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 19:17 pm
  • அ+ அ-

இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.  நோ-ரிசல்ட் என்பது கிரிக்கெட் விதிகளின் படி ஆரம்பித்து கொஞ்சம் போட்டி நடைபெற்று பிறகு கைவிடப்படும் போட்டி முடிவு ஏற்படாத நோ-ரிசல்ட் போட்டியாகும். ஆனால் டாஸ் போடாமலேயே போட்டி ரத்து செய்யப்பட்டால் அது கைவிடப்பட்ட (abandoned) போட்டியாகும். அந்த வகையில் 2019 உலகக்கோப்பை கைவிடப்பட்ட போட்டியில் அதிக போட்டி என்ற வகையில் சாதனை புரிந்துள்ளது (!).

 

இதன் மூலம் இலங்கைக்கு கூடுதல் சாதகமே இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டதால் 2 புள்ளிகள் பெற்றதால் கிட்டத்தட்ட ஒரு போட்டியில் வென்றது மாதிரி ஆகிவிடுகிறது, இதனால் 4 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இலங்கை காட்சியளித்தாலும் 4 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது, 4 புள்ளிகள் வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் புள்ளிகளில் சமநிலை வகிக்கிறது.

 

மாறாக வங்கதேசம் 4 போட்டிகளில் 1 வெற்றி 2 தோல்வி, 1 கைவிடப்பட்ட போட்டியுடன் 3 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்த கிடைத்த வாய்ப்பு வங்கதேசத்திற்கு மழையால் பறிபோனது.

 

நேற்று தென் ஆப்பிரிக்கா - மே.இ.தீவுகள் போட்டி ஆரம்பித்து பிறகு ரத்து செய்யப்பட்ட நிலையில் புள்ளிகள் பகிரப்பட்டது வெஸ்ட் இண்டீஸ் 3 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.  மொத்தத்தில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன, 2 முற்றிலும் ஒன்று தொடங்கி பிறகு ரத்து.

 

வெஸ்ட் இண்டீஸ்,, வங்கதேசம்,  பாகிஸ்தான் ஆகிய அணிகள் 3 புள்ளிகளுடன் முறையே 6,7,8ம் இடங்களில் உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close