[X] Close

ஹிஜாப்... மனித உரிமைகள் மீதான அத்துமீறல்: ஒரு வீராங்கனையின் கண்டனக் குரல்


indian-grandmaster-pulls-out-of-iran-chess-tournament

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Jun, 2018 15:15 pm
  • அ+ அ-

செஸ் வீராங்கனை சவுமியா சுவாமிநாதனின் முகநூல் பதிவு இன்று இணையத்தின் சென்ஷேசனாகியிருக்கிறது.

ஆம், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை ஈரானின் ஹம்தான் நகரில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாக சவுமியா சுவாமிநாதன் தனது ஃபேஸ்புக் வாயிலாக அறிவித்திருக்கிறார்.

செஸ் ஆர்வலர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தான் ஏன் போட்டியில் பங்கேற்கவில்லை என்பதற்காக விளக்கத்தை அவர் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர், "ஆசிய நாடுகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன். இதற்காக வருந்துகிறேம். ஆனால், அந்தப்போட்டியில் நான் கலந்துகொள்ளா வேண்டுமானால் தலையை மறைத்து ஹிஜாப் கட்டாயமாக அணிய வேண்டும். ஈரானிய சட்டத்திற்கு நான் அடிபணிய வேண்டும். அப்படி கட்டாயமாக ஹிஜாப் அணியச் செய்வது மனித உரிமை மீறல் என நான் கருதுகிறேன்.

எனது சுதந்திரத்தை பறிக்கும் செயல். எனது மத உரிமைக்கு எதிரானது. எனவே, இத்தகைய சூழலில் நான் ஈரான் செல்வது சாத்தியமற்றது. எனது சுய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள நான் ஈரானுக்குச் செல்லாமல் இருப்பதே சரியாக இருக்கும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

விளையாட்டுத் துறையையும் அவர் சாடியிருக்கிறார். "இதுபோன்ற சாம்பியன்ஷிப் போட்டிகளை ஒருங்கிணைக்கும்போது விளையாட்டு வீரர்களின் உரிமைகளுக்கும் நலனுக்கும் குறைந்தபட்ச முக்கியத்துவம்கூட கொடுக்காத நிலை வருத்தமளிக்கிறது. தேசத்துக்காக விளையாடும்போது சீருடை அணியச் சொல்வதை ஏற்க முடியும்.

ஆனால், விளையாட்டில் மதச்சார்புடைய ஓர் உடையை அணிய வைப்பது எந்த வகையில் நியாயம்" என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். சவுமியா சுவாமிநாதன் உலகளவில் 97-வது இடத்தில் இருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close