[X] Close
 

செல்ஃபியால் உடைந்த கோலியின் காது!


virat-kohli-wax-statue-at-madame-tussauds-damaged

  • பாரதி
  • Posted: 08 Jun, 2018 13:31 pm
  • அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அண்மையில் நிறுவப்பட்டது. இந்த மெழுகுச் சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.

ஆனால், நிறுவப்பட்ட இரண்டே நாளில் கோலி சிலையின் காது உடைந்தது. இதனால், அருங்காட்சிய நிர்வாகிகள் சிலையை சீர் செய்ய எடுத்துச் சென்றனர். தற்போது அது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
இது குறித்து மேடம் டுசாட்ஸ் நிர்வாகம், "கோலியின் மெழுகுச் சிலையின் வலது காது ஏதோ காரணத்தால் உடைந்துவிட்டது. அதை நாங்கள் சரி செய்துவிட்டோம். தற்போது மீண்டும் ரசிகர்கள் அருங்காட்சியகத்துக்கு வந்து கோலி சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளது.

கோலியின் காது உடைய ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள போட்டாபோட்டி போட்டுக் கொண்டது காரணமாக இருக்கலாம் என அருங்காட்சியகம் சந்தேகிக்கிறது. இருப்பினும் இந்த சந்தேகத்தை நிர்வாகம் இன்னும் உறுதி செய்யவில்லை.
ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close