[X] Close

பிரெஞ்சு ஓபன் : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிக் முன்னேற்றம்


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 12:11 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

பிரான்ஸில் நடந்துவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியனும், அமெரிக்க நட்சத்திர வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமானதும், களிமண் தரையில் நடக்கும் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.

இதில் அமெரிக்க வீராங்கனையும், தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸை எதிர்த்து சகநாட்டு வீராங்கனை சோபியா கெனின் களம் கண்டார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே கெனின் கைதான் ஓங்கி இருந்தது, செரீனா வில்லியம்ஸ் தனது தவறான ஷாட்களாலும், சர்வீஸ் போடுவதில் குளறுபடிகளாலும் புள்ளிகளை இழந்தார்.

ஒரு மணிநேரம் 32 நிமிடம்வரை நடந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை 6-2, 7-5 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார் சோபியா கெனின்.

தனது முதல் செட்டில் கெனின் 4-2 என்ற கணக்கில் முன்னணி பெற்றும், செரீனாவின் சர்வீஸ்களை  பிரேக் செய்தும் அதிர்ச்சி அளித்தார். 2-வது செட்டிலும் 2-0 என்ற முன்னணியில்தான் கெனின் சென்றதால் முன்னாள் சாம்பியனான செரீனாவால் அவருக்கு ஈடு கொடுத்து விளையாட முடியாமல் தோல்வி அடைந்தார்

se.jpg 

ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட்டின் 24 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்ய செரீனா தொடர்ந்து போராடி வந்தாலும் முடியவில்லை. குழந்தை பிறப்பு, முழங்கால் காயம் ஆகியவற்றால் செரீனா தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பமுடியாமல் திணறி வருகிறார்.

இந்த தோல்வி குறித்து செரீனா கூறுகையில், " நான் கெனினை சாதாரண வீராங்கனை என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் விளையாடியது நம்பமுடியாத வகையில் இருந்தது " எனத் தெரிவித்தார்.

4-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லிக் பார்டியுடன் மோதுகிறார் கெனின்.

மற்றொரு 3-வது ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நமோமி ஒசாவை 6-4, 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார் செக்குடியரசு வீராங்கனை கேத்தரீனா சினேகோவா.  அடுத்த சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதுகிறார் சினேகோவா.

மேலும், ரோமானிய வீராங்கனை சிமோனோ ஹாலப், போலந்து வீராங்கனை இகா ஸ்வாடெக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோக்விக் 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்களில் இத்தாலி வீரர் சால்வடோர் கார்சோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close