[X] Close
 

நான்தான் சிறந்தவன் என என்றுமே நினைத்ததில்லை: மெஸ்ஸி


i-don-t-consider-myself-the-best-messi

  • பாரதி
  • Posted: 05 Jun, 2018 15:50 pm
  • அ+ அ-

நான்தான் சிறந்தவன் என என்றுமே நான் நினைத்ததில்லை என பார்சிலோனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்திருக்கிறார். பிஃபா உலகக் கோப்பைக்காக சர்வதேச அணிகள் தயாராகி வருகின்றன. அனைவரது பார்வையும் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி மீதுதான் இருக்கிறது. ஆனால் அவரோ எல்லா வீரர்களைப் போல் நானும் சாதாரணமவன்தான் என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார்.

பீப்பிள் மேகசின் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி, "நான்தான் சிறந்தவன் என்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை. எல்லா வீரர்களைப் போலவும் நானும் மற்றொரு வீரன். விளையாட்டு மைதானத்தில் தொடங்கும்போது நாங்கள் அனைவருமே சமமானவர்கள்தான். இந்த உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணி மிகச் சிறப்பாக விளையாடும். போட்டியை மிக நிதானமாக எதிர்கொண்டு வெற்றியை நிலைநாட்டுவோம்" என்று அவர் கூறினார்.

மெஸ்ஸி இதுவரை 9 முறை லா லிகா விருதையும், 4 முறை சாம்பியன்ஸ் லீக் கிரவுன்ஸ் விருதையும், 5 முறை பலூன் டி ஆர் விருதையும் பெற்றுள்ளார்.  552 கோல்களை அடித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close