[X] Close

முதல் ஓவரிலேயே அதிர்ச்சியளித்த தெ.ஆ.கேப்டன் டுபிளெசிஸ்: எதிர்பாராத் திருப்பம்


  • kamadenu
  • Posted: 30 May, 2019 15:56 pm
  • அ+ அ-

தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா, லுங்கி இங்கிடி போன்ற அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கையில் சற்றும் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் முதல் ஓவரிலேயே தோனி பாணியில் இம்ரான் தாஹிரைக் கொண்டு வந்து இங்கிலாந்தின் திட்டங்களில் கையை வைத்தார்.

முதல் ஓவரையே இம்ரான் தாஹிர் வீசுவதை சற்றும் எதிர்பார்க்காத இங்கிலாந்து அணி சற்றே அதிர்ச்சியடைந்தது.

முதல் பந்தை ஜேசன் ராய் சிங்கிள் தட்டி விட ஸ்ட்ரைக்கிற்கு வந்தார் அபாய பேட்ஸ்மென் ஜானி பேர்ஸ்டோ. இம்ரான் தாஹிர் ஒரு கிளாசிக் ஆஃப் ஸ்பின் பந்தை வீச பிட்சில் நின்று வெளியில் திரும்ப பேர்ஸ்டோ முன் காலைப் போட்டு மட்டையை நீட்ட எட்ஜ் ஆனது. டக் அவுட் ஆனார் பேர்ஸ்டோ.

இது சற்றும் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. அதாவது இம்ரான் தாஹிரைக் கொண்டு வந்தது ஒரு திருப்பம், பந்து திரும்பியது இன்னொரு திருப்பம்.

இங்கிலாந்து தற்போது ரூட் (39), ராய் (35) மூலம் 12.4 ஓவர்களில் 75/1 என்று ஆடிவருகிறது.

பேர்ஸ்டோவை டக் அவுட் செய்ததன் மூலம் அதிரடித் தொடக்கம் கிடைக்கவில்லை இங்கிலாந்து அணிக்கு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close