[X] Close

ராகுலா? விஜய் சங்கரா? - தெ.ஆ-வுக்கு எதிரான போட்டியின் 11 வீரர்கள் யார் யார்?


11

  • kamadenu
  • Posted: 29 May, 2019 15:50 pm
  • அ+ அ-

2019 உலகக்கோப்பை நாளை தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகத் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா அணி அதன் பிறகு ஞாயிறன்று வங்கதேசத்தையும் பிறகு 5ம் தேதி இந்திய அணியையும் சந்திக்கிறது.

 

இந்த அட்டவணையே தென் ஆப்பிரிக்காவை ஒழிக்கத்தானோ என்ற ஐயம் எழுவது ஒருபுறம் இருக்கட்டும், இந்திய அணி தன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக யாரைத் தேர்வு செய்யப்போகிறது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக சஞ்சய் மஞ்சுரேக்கர் முதல் போட்டிக்கான இந்திய லெவனைத் தேர்வு செய்துள்ளார்.

 

2015 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8 போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் உலகக்கோப்பைப் போட்டித் தொடர்களில் 4 ஆட்டஙளில் இந்திய அணி ஒன்றில்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தன் அணியை அறிவித்த சஞ்சய் மஞ்சுரேக்கர், ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் மேல் எந்தக் கேள்வியும் இல்லை என்றவாறு கடந்து சென்று தொடர்ந்து நம்மை நச்சரித்து வரும் 4ம் நிலை பற்றி பேசும்போது, ராகுலுக்குப் பதிலாக விஜய் சங்கரைத் தேர்வு செய்கிறார்.

 

கேஎல்.ராகுல் வங்கதேசத்துக்கு எதிராக நேற்று 4ம் நிலையில் இறங்கி கடினமான சூழ்நிலையில் சதம் எடுத்துக் கொடுத்துள்ளார், இந்நிலையில் விராட் கோலியே நான்காம் நிலைக்கு ராகுல்தான் என்று கூறியுள்ளார். ராகுலும் ‘என்ன செய்வது ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்ற தொனியில் தன் சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

 

ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கர் விஜய் சங்கரைத் தேர்வு செய்து அதற்குக் காரணங்களையும் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் தெரிவித்துள்ளார்.  மேலும் நியூஸிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜாவையும் மஞ்சுரேக்கர் பரிசீலிக்கவில்லை. புவனேஷ்வர் குமாரும் இவர் அணியில் இடம்பெறவில்லை

 

அதாவது, தொடக்கத்திலேயே அவருக்கு சில வாய்ப்புகளைக் கொடுத்து இந்த மட்டத்துக்கு அவர் தயாரா என்று பார்த்து விட வேண்டும், பிற்பாடு அவரைக் கொண்டு வருவது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.

 

மஞ்சுரேக்கரின் இந்திய அணி வருமாறு:

 

ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி,  விஜய் சங்கர், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, பும்ரா, சாஹல்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close