[X] Close

'இந்தியாவுடனான போட்டி முடியட்டும்; பார்க்கலாம்': பாக். வீரர்களின் கோரிக்கைக்கு கைவிரித்த வாரியம்


  • kamadenu
  • Posted: 26 May, 2019 17:59 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுடன் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து பாகிஸ்தான் அணியினர் தங்களின் குடும்பத்தினரை உடன் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறோம் என்று  அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனால், ஜூன் 16-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணியினர் இருக்கிறார்கள்.

அந்தப் போட்டியில் தோற்றுவிட்டால், பாகிஸ்தான் அணியினர் தங்கள் மனைவி, பிள்ளைகளை உடன் வைத்துக்கொள்ள முடியாது எனத் தெரிகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களின் மனைவி, குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ள அந்நாட்டு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், இதே போன்று உலகக் கோப்பை போட்டியிலும் வீரர்கள் தங்களின் மனைவி, குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தததுபோல் உலகக்கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் அணியினர் தோற்றுவிடுவார்கள் என்பதால் கேப்டன் சர்பிராஸ் அகமது வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டது.

மேலும், மற்ற அணிகளின் வீரர்கள் தங்களின் மனைவி, பிள்ளைகளை தாங்கள் தங்கும் ஹோட்டல்களில் உடன் வைத்துக் கொள்ளவில்லை. இந்த நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்த பாகிஸ்தான் வாரியம், திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வாரியத்துக்கு அணி வீரர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வாரியத்தின் விடாப்படியான முடிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று வீரர்கள் மனம் வருந்தினர்.

இதையடுத்து, அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறோம். ஆனால், ஜூன் 16-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின் பார்க்கலாம். அந்தப் போட்டியில் எவ்வாறு விளையாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து முடிவு செய்வோம் எனத் தெரிவித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஹேரிஸ் சோஹைல், ஆஷிப் அலி ஆகியோர் மட்டும் தங்களின் மனைவி, குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ள சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். இருவரின் குடும்பத்திலும் சிக்கலான பிரச்சினை நீடிப்பதால் இந்த அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக ஆஷிப் அலியின் மகள் சமீபத்தில் புற்றுநோயால் இறந்துவிட்டார். அதனால், தனது மனைவிக்கு ஆறுதலாக உடன் வைத்துக்கொள்ள அனுமதி பெற்றுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close