[X] Close

'முட்டாள்தனமாகப் பேசுகிறார்': கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்த  அப்ரிடி


  • kamadenu
  • Posted: 26 May, 2019 12:26 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை மீண்டும் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கும் இடையிலான நட்புறவுக் களத்திலும், வெளியிலும் கசப்பாகவே இருந்து வந்துள்ளது. இருவரும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டாலும், அவ்வப்போது வார்த்தைகளால் மோதிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினை, இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் எதுவாக இருந்தாலும், ஒருவொருக்கு ஒருவர் கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கம். சமீபத்தில் அப்ரிடி எழுதிய புத்தகத்தில் கம்பீர் குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கு கம்பீரும் பதிலடி கொடுத்து மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் அப்ரிடி என்று விமர்சித்தார்.

இந்த சூழலில் டெல்லி கிழக்கு தொகுதியில் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கவுதம் கம்பீர் வெற்றி பெற்றார். அதன்பின் நிருபர்களுக்கு ஒரு நிகழ்ச்சியில் அளித்த பேட்டியின் போது கம்பீர் பேசுகையில், "பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பிசிசிஐ கடினமான நிலைப்பாடு அல்லது முடிவு எடுக்க வேண்டும். அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி அனைத்து வகையான உறவுகளையும் உதற வேண்டும்.

ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் மோதும் சூழல் வந்தால்கூட விளையாடக்கூடாது. இதனால், இந்தியாவுக்கு சில புள்ளிகள் இழப்பு ஏற்பட்டாலும் விளையாடக்கூடாது. நம்முடைய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த நிலையில், பாகிஸ்தானுடன் நாம் விளையாடக்கூடாது" எனத் தெரிவித்தார்.

gautam-gambhir-shahid-afri.jpg 

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் ஷாகித் அப்ரிடி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவரிடம் கம்பீர் கூறிய வார்த்தைகளை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் சூழல் ஏற்பட்டாலும் இந்தியா விளையாடக்கூடாது என்று தெரிவித்துள்ளதைக் கேட்டனர்.

அதற்கு அப்ரிடி கூறுகையில், "கவுதம் கம்பீர் பேசும் போது உண்மையில் மூளையை, புத்திசாலித்தனத்தை பயன்படுத்தித்தான் பேசுகிறாரா எனத் தெரியவில்லை. கம்பீர் பேசுவதைப் பார்த்தால் முட்டாள்தனமாக இருக்கிறது. புத்தியுள்ளவர்கள் யாரேனும் இதுபோன்று பேசுவார்களா? அதிலும் படித்தவர்கள், ஞானமுள்ளவர்கள் இதுபோன்று பேசுவார்களா?" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close