[X] Close

ட்ரெண்ட் போல்ட்டின் எளிய உத்திக்கு இந்திய டாப் 3 காலியாக விராட் கோலியும் ஏமாற்றம்


3

  • kamadenu
  • Posted: 25 May, 2019 16:02 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

லண்டன் ஓவல் மைதானத்தில் ஆடப்பட்டு வரும் உலகக்கோப்பைக்கு முந்தைய பயிற்சி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாகத் திணறி வருகிறது.

கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் சற்று முன் கொலின் டி கிராண்ட் ஹ்ோம் பந்தில் பவுல்டு ஆகி ஆட்டமிழந்தார். பாண்டியா 8 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கிறார். இந்திய அணி 11வது ஓவரில் 39  ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

ட்ரெண்ட் போல்ட் மிகப்பிரமாதமான ஸ்விங் பவுலிங்கில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல் ஆகியோரை வீழ்த்தினார்.

எளிய உத்திதான் போல்ட்டினுடையது, அவுட் ஸ்விங்கரை ஒன்றிரண்டு வீசி விட்டு பிறகு ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தால் முடிந்தது கதை அப்படித்தான் ரோஹித் சர்மா 2 ரன்களில் எல்.பி.ஆனார். நடுவர் தீர்ப்பை எதிர்த்து ரிவியூ செய்து தோல்வியடைந்தார்.

ஷிகர் தவணுக்கும் போல்ட் பந்துகளை வெளியே எடுத்து அவுட் ஸ்விங்கர் வீசிக் கொண்டிருந்தவர் ஒரு பந்தை அதே லெந்தில் பிட்ச் செய்து உள்ளே கொண்டு வர ஷிகர் தவன் இதனை எதிர்பார்க்கவில்லை மட்டைக்கும் கால்காப்புக்கும் இடைவெளி பந்து போகும் வழியில் உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ப்ளண்டெல் கேட்ச் பிடித்தார்.

கே.எல்.ராகுல் ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்கள் இருந்த நிலையில்  கொஞ்சம் வெளியே சென்ற பந்துகளை வீசிய போல்ட் ஒரு பந்தை ஸ்டம்பில் கொஞ்சம் உயரமாக எழுப்ப ராகுல் கொஞ்சம் மந்தமாக வினையாற்ற எழும்பிய பந்தை தடுத்தாடும் முயற்சியில் பந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது.

சர்வதேச அளவில் அனுபவமுள்ள் ரோஹித், தவண், ராகுல் ஆகியோர் போல்ட்டின் எளிய உத்திக்கு இரையானது கவலையளிப்பதாகும், அந்த மட்டத்தில் வெளியே பந்தை ஸ்விங் செய்து கொண்டேயிருந்தால் ஒரு பந்து உள்ளே வரும் என்பதை எதிர்பார்க்க வேண்டும் அதுதான் பேட்டிங் திறன். ஆனால் ஐபிஎல் மட்டைப் பிட்ச், மந்தப் பிட்ச்களில் ஆடிவிட்டு ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்விங் ஆகும் இங்கிலாந்து பிட்ச்களில் சரியாக ஆட முடியாமல் திணறி வருகின்றனர்.

விராட் கோலியும் மிகவும் சோம்பேறித்தனமாக, உள்ளே வரும் பந்தை எதிர்பாராமல் முன்காலைக் குறுக்காகப் போட்டு தடுத்தாட நினைக்க பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது. மொஹீந்தர் அமர்நாத் பந்தில் ரிச்சர்ட்ஸ் பவுல்டு ஆனால் எப்படி இருக்கும் அது போல் இருந்தது இந்த பவுல்டு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close