[X] Close

சிக்சர் ‘கில்லி’ ரோஹித் சர்மா: கோலி, தோனியும் கூட அருகில் இல்லை- ஒரு சுவாரஸிய புள்ளிவிவரம்


  • kamadenu
  • Posted: 25 May, 2019 15:19 pm
  • அ+ அ-

-நோபாலன்

இங்கிலாந்து பிட்ச்கள் தார்ச்சாலைகள் போல் அமைந்து ஸ்விங்கும் ஆகவில்லை எனில் ரன்கள் 340-350 என்றுதான் ரன்கள் செல்லும் அப்போது இலக்கை நிர்ணையித்தாலும் சரி இலக்கை விரட்டினாலும் சரி ரோஹித் சர்மாவின் ஒரு லாங் இன்னிங்ஸ் பங்களிப்பு இல்லாமல் இந்தியா வெல்வது கடினம்.

 

ஆனால் இவரது தளர்வான உத்தி முதல் 5-10 ஓவர்களைத் தாண்டவிடாமல் செய்தால் இந்திய அணிக்கு கஷ்டம்தான். இவர் எல்.பி.டபிள்யூ ஆகக்கூடியவர் என்பது கவனத்திற்குரியது.

 

ரோஹித் சர்மா அதிரடி வழிகளுக்குத் திரும்பும் முன் மந்தமாகவே தொடங்குவார், சூழ்நிலை, பவுலர்கள், லெந்த், எதிரணி உத்தி என்று அனைத்தையும் கணித்த பிறகே அவர் அதிரடிக்கு வருவார்.  அந்தவழியில்தான் அவர் 3 இரட்டைச் சதங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த நம்பர் 1 அதிரடி வீரர் என்ற பெயர் பெற்றுள்ளார். இதில் அதிகபட்சமகா இலங்கைக்கு எதிராக 264 ரன்களை எடுத்ததுதான் இன்று வரை உலக சாதனை.

 

ரோஹித் சர்மாவின் ஒருநாள் சர்வதேச போட்டி ஸ்ட்ரைக் ரேட்  2015 முதல் 2019 வரை முதல் 10 ஒவர்களில் ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் 74.66, 11 முதல் 35 ஓவர்கள் வரை அவர் நின்றால் ஸ்ட்ரைக் ரேட் 101.22, 35.1 முதல் 50 ஓவர்கள் வரை அவர் நின்றால் ஸ்ட்ரைக் ரேட் 153.66. என்று கிரிக் இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

இன்னொரு சுவாரசியமான புள்ளி விவரம் என்னவெனில் இதே 4 ஆண்டு காலக்கட்டத்தில் ரோஹித்தின் சிக்ஸ் அடிக்கும் திறன் அவரது ரன் ரேட்டை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.  2015 முதல் 2019 வரை ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 130 சிக்சர்களை அடித்துள்ளார்.

 

இதே காலக்கட்டத்தில் விராட் கோலி வெறும் 55 சிக்சர்களையும் தோனி 41 சிக்சர்களையும் அடித்துள்ளார்.  ரோஹித் சர்மா இந்தக் காலக்கட்டத்தில் 71 போட்டிகளில் 130 சிக்சர்களை அடிக்க விராட் கோலி 69 போட்டிகளில் 55 சிக்சர்களையும் தோனி 79 போட்டிகள், 61 இன்னிங்ஸ்களில் 41 சிக்சர்களை அடித்துள்ளார், இவரது டவுன் ஆர்டர் சிக்சர்களைக் குறைக்க வாய்ப்புள்ளது என்றாலும் தோனி இப்போதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வளவாக சிக்சர்களை அடிப்பதில்லை.

 

இவருக்கு அடுத்த படியாக ஹர்திக் பாண்டியா 29 இன்னிங்ஸ்களில் 34 சிக்சர்களை அடித்திருக்கிறார். ஷிகர் தவண் கூட 34 சிக்சர்களுடன் பின் தங்கியுள்ளார், ஆகவே ரோஹித் சர்மா தொடக்கத்தில் இறங்கி 40-45 ஓவர்கள் வரை நின்றால்தான் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்கவோ, பெரிய இலக்குகளை எளிதில் விரட்டவோ முடியும் என்று தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close