[X] Close

வங்கதேச ரசிகர்களின் உ.கோப்பை ஆர்வ நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைத்த கேப்டன்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 19:52 pm
  • அ+ அ-

-பிடிஐ

அயர்லாந்து மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் கோப்பையை வென்றதையடுத்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கள் அணியின் ஆட்டத்திறன் மீது வங்கதேச ரசிகர்கள் நெருப்பென பொங்கி எதிர்பார்ப்புகளை வளர்த்து கொண்டுள்ளனர்.

 

ஆனால் கேப்டன் மஷரபே மோர்டசா எதார்த்தமான மனிதராக அந்த எதிர்பார்ப்பு நெருப்பில் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். வங்கதேச ரசிகர்கள் தங்கள் நாட்டு அணி மீது அதீத பற்றுதலும் எதிர்பார்ப்பும் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் கொண்டவர்கள்.

 

ஆட்டத்தைப் பார்க்கும் போது கூட தங்கள் அணி பேட்ஸ்மென்களின் மட்டையில் பந்து பட்டாலே ஆர்வமுடன் கோஷமிடும் ரசிகர்கள் எதிரணியினர் சிக்ஸ் அடித்தால் கூட கல்லைப்போட்டது போல் மவுனம் சாதிக்கும் ரசிகர்களாவார்கள், இந்நிலையில் முத்தரப்பு தொடரை வென்றால் என்ன ஆவார்கள்? அவர்களின் எதிர்பார்ப்பு நெருப்பென வளர்ந்துள்ளது.

 

இந்நிலையில் கேப்டன் மஷ்ரஃபே மோர்டசா கூறும்போது, “தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, அதிரடி இங்கிலாந்துடன் முதல் 3 போட்டிகள், இந்த 3 அணிகளுமே மிகவும் வலுவானவை.

 

இவர்களுக்கு எதிராக வெற்றி பெறுவது என்பது சுலபமல்ல. கடந்த 5-7 ஆண்டுகளாக ரசிகர்கள் நாங்கள் வெற்றி பெறுவோம், பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் போட்டிகளைப் பார்க்க வருகின்றனர்.

 

ஆனால் நான் அவர்களுக்குக் கூறுவதெல்லாம் உலகக்கோப்பை என்பது வேறு ஒரு ஆட்டத்தொடர், இங்கிலாந்தில் கிரிக்கெட்டைப் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும் ரன்கள் குவிக்கப்படுகின்றன இங்கு. இதற்கு வேறொரு அணுகுமுறை தேவை” என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு நெருப்பில் தண்ணீர் ஊற்றி அணைத்தார் மோர்டசா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close