[X] Close

என் பந்துகளை ஆந்த்ரே ரஸல் அடித்ததில்லை... விராட் கோலியை டக்கில் வீழ்த்தியிருக்க வேண்டும்: மே.இ.தீவுகளின் ஒஷேன் தாமஸ் உற்சாகப் பேட்டி


  • kamadenu
  • Posted: 22 May, 2019 19:32 pm
  • அ+ அ-

மே.இ.தீவுகளின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரை இந்திய டாப் பேட்ஸ்மென்கள் சரிவர ஆட முடியாமல் திணறினர் என்பதே உண்மை.

 

இவரது வாழ்க்கை மிகவும் கடினமானது. இவர் பதின்ம வயதை எட்டும் முன்பே இவரது மூத்த சகோதரர் 16 வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம் ஜமைக்கா அப்படிப்பட்ட இடம்தான் என்கிறார் ஒஷேன். ஒரு முறை லோக்கல் சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒஷேன் தாமஸ் செல்லும் போது ஏடிஎம்-ல் பணம் எடுத்த இவரை துப்பாக்கி ஏந்திய 3 பேர் வழிப்பறி செய்தனர்,  “இங்கெல்லாம் குறைந்தபட்சம் துப்பாக்கிகள் இல்லாமல் திருடர்கள் கிடையாது நான் அவர்களிடத்தில் என் பணம், சங்கிலி, வாட்ச் அனைத்தையும் கொடுக்க வேண்டியதாயிற்று” என்றார்.

 

இந்நிலையில் கிரிக் இன்போவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

2016-ல் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன், பவுலிங் பவுலிங் பவுலிங் என்று வீசிக்கொண்டே இருந்தேன், கெய்ல் என்னைப் பார்த்தார், நான் அணியில் தேர்வு செய்யப்பட்டேன்.

 

கிறிஸ் கெய்லை வீழ்த்தியிருக்கிறேன், சிபிஎல் கிரிக்கெட்டில் என் கேப்டன் சங்கக்காரா வேகமாக வந்து வேகமாக வீசு, பின் வாங்கவேண்டாம் என்றார் நான் அதைக் கடைபிடித்தேன் கெய்லை வீழ்த்தினேன்.

 

ஆந்த்ரே ரஸலுக்கு வலையியில் பந்து வீசியிருக்கிறேன். அவர் என் பந்துகளை அடித்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? வலையில் நான் வீசினால் பேட்ஸ்மென்களுக்கு ஒரு பயம்தான்.

 

மேட்சில் தோள்பட்டை உயரத்துக்கு ரஸலுக்கு வீசுவேன். அவர் எங்கு போட்டாலும் அடிக்கக் கூடியவர்தான், ஆனால் வேகத்தின் மூலம் அவரை பீட் செய்ய முடியும். தோள்பட்டை உயரத்துக்கு அவருக்கு வீச வேண்டும், அந்தப் பந்துகளில் அவர் வலுவானவர் இல்லை.

 

இந்தியாவுக்கு வந்த போது என் டி20 அறிமுகப் போட்டியில் ஷிகர் தவண், ரோஹித் சர்மாவை ஒரே ஓவரில் வீழ்த்தினேன். இது எனக்கு மிகப்பிரமாதமான தருணம். இருவரும் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மென்கள், பிறகு விராட் கோலியை டக்கில் வெளியேற்றிருக்க வேண்டும். (5வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி இவர் பந்தை எட்ஜ் செய்ய ஸ்லிப்பில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கேட்சைத் தவறவிட்டார் அப்போது கோலி 0-வில் இருந்தார்).

 

இவ்வாறு கூறியுள்ளார் ஒஷேன் தாமஸ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close