[X] Close

இளம் வீச்சாளர்கள் என் தலைக்குக் குறிவைக்கின்றனர்... ஆனாலும் என்னைக் கண்டு பயம் உள்ளது: கிறிஸ் கெய்ல்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 16:01 pm
  • அ+ அ-

எதிரணி பவுலர்கள் இன்னும் கூட தன் பேட்டிங் கண்டு பயப்படுகின்றனர் என்கிறார் 39 வயது அபாய வீரர் கிறிஸ் கெய்ல், 2019 உலகக்கோப்பைதான் கிறிஸ் கெய்ல் ஆடும் கடைசி ஒருநாள் தொடராக அமையலாம்.

 

சமீபத்தில் இங்கிலாந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து தொடரை சமன் செய்ததில் கெய்லின் பங்கு இன்னமும் இங்கிலாந்துக்கு பெரிய அச்சுறுத்தல்தான்.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கிறிஸ் கெய்ல் கூறியதாவது:

 

இளம் வீச்சாளர்கள் என் தலைக்கு குறி வைக்கின்றனர். எனவே முன்பு போல் எனக்கு அவ்வளவு எளிதான உலகக்கோப்பையாக இருக்காது.  நான் அப்போது விரைவு கதியில் ஆடினேன், அவர்களும் பயந்தார்கள், யுனிவர்ஸ் பாஸ் என்ன செய்வார் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் இப்போதும் கூட அவர்கள் மனத்தின் ஒரு மூலையில் நான் என்ன செய்யக்கூடியவன் என்ற பயம் இருக்கும்.

 

ஹேய் இவர்தான் உலகின் மிக அபாயகரமான பேட்ஸ்மென் என்பது அவர்களுக்குத் தெரியும்.

 

கேமரா முன்னால் அவர்களிடம் கேளுங்கள் எங்களுக்கா? பயமா? இல்லவேயில்லை என்பார்கள், ஆனால் தனியாகப் போய் கேட்டுப்பாருங்கள் ‘ஹேய் கெய்ல்தான், கெய்ல்தான் என்று கூறுவார்கள்.

 

நான் இதனை ரசித்து மகிழ்கிறேன், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான போர்களத்தை விரும்புகிறேன்.  ஒரு பேட்ஸ்மேனாக இது நமக்கு கூடுதல் உந்துதலை அளிக்கிறது. இத்தகைய சிறிய சவாலகள் எனக்குப் பிடித்திருக்கிறது.

 

ரசிகர்கள் எப்போதும் சிக்சர்களைக் கேட்பார்கள். இதுவும் எனக்கு கூடுதல் உந்துதலை ஏற்படுத்துகிறது. எனக்கு நிரூபிக்க எதுவும் இல்லை.  நான் இப்போதும் நல்ல பார்மில்தான் இருக்கிறேன், ஐபிஎல் போட்டிகளும் பெரிதாக இல்லாவிட்டாலும் சுமாராக எனக்கு அமைந்தது.

 

ஆட்டத்தை ஆடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, இந்த உலகக்கோப்பைக்கு வருவதற்கு முன் சிலபல போட்டிகளை ஆடியிருப்பதால் நான் எங்கு இருக்கிறேன் என்பது புரிகிறது.

 

பெரிய தொடர், என் மனநிலையை சரியாக வைத்துக் கொள்வது அவசியம்.

 

இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close