[X] Close

உலகக் கோப்பை ‘டெத்’ ஓவர்களில் கலக்க வரும் 'யார்கர் ஹீரோக்கள்': இத்தனை வகையா!


  • kamadenu
  • Posted: 22 May, 2019 15:44 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

உலகக் கோப்பைப் போட்டியில் டெத் ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் முக்கிய ஆயுதமாக இருப்பது யார்க்கர். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து மைதானங்களில் குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்களின் யார்க்கர் பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடியை அளிக்கும்.

யார்கர்களில் வகைகள் இருக்கிறது,  'டிரடிஷனல்' யார்கர், 'இன்ஸ்விங்கர்' யார்கர், 'நக்குல்' யார்கர், 'ஸ்லோபால்' யார்கர் என வகைப்படுத்தலாம்.

வழக்கமான யார்க்கர்

பேட்ஸ்மேன்களின் கால்களை நோக்கி வீசப்படும் டிரடிஷனல் யார்கர் முறையை பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், அக்தர் அதிகமாக வீசி கடைசிநேரத்தில் பேட்ஸ்மேன்களை திணறிடிப்பார்கள். இந்த பந்தை தவறவிட்டால் ஸ்டெம்புகள் பறந்துவிடும்.

rabada.jpg 

அந்த வகையில் டிரடிஷனல் யார்கர் பந்துவீச்சை அதிகமாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா கையாள்வார். உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் கவனிக்கத்தக்க பந்துவீச்சாளராக ரபாடா இருந்து வருகிறார். ஐபிஎல் போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா வீரர் ரஸலின் ஸ்டெம்பை யார்கர் மூலம் தெறிக்க விட்ட ரபாடாவின் பந்துவீச்சை யாரும் சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள்.

ஜோப்ரா ஆர்ச்சர்

jofra.jpg 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஜோப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ஆர்ச்சர், வேகப்பந்துவீச்சில் துல்லியத்தன்மையை அதிகமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் முக்கிய துருப்புச் சீட்டாக ஆர்ச்சர் இருப்பார். ஆர்ச்சர் தன்னுடைய டி20 வாழ்க்கையில் இதுவரை 61 யார்கர்களை வீசியுள்ளார்.

இன்ஸ்விங் யார்கர்

வேகப்பந்துவீச்சாளர்கள் யார்கர் வீசும்போதே அதை இன்ஸ்விங்கோடு சேர்த்து வீசுவது. அதாவது பந்து வரும்போதே பேட்ஸ்மேனின் கால்பகுதியில் இடையே இருக்கும் இடைவெளியே நோக்கி வரும்.

05MitchellStarc.jpg 

இந்த வகை இன்ஸ்விங் யார்கரை வீசுவதில் ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் வல்லவர்.கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையை மிரட்டிய ஸ்டார்க் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டார்க் இப்போது மீண்டும் உலகக் கோப்பைப் போட்டிக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த முறை இவரின் இன்ஸ்விங் யார்கர் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கீமர் ரோச்(மே.இ.தீவுகள்)

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச்சின் பந்துவீச்சுக்கு இந்த உலகக் கோப்பையில் தனிஇடம் கிடைக்கும். பந்தை ரோச் ஸ்விங் செய்யும் விதம், துல்லியத்தன்மையுடன் வீசும் இன்ஸிவிங் யார்கர்கள் அதிகமான விக்கெட்டுகளை பெற்றுத்தரும். டெத் ஓவர்களில் ரோச் பந்துவீச்சு எதிரணிக்கு சிம்மசொப்னாகவும், மே.இ.தீவுகளுக்கு துருப்புச்சீட்டாகவும் அமையும்.

Kemar-Roach-1.jpg 

நக்குல் யார்கர்

கைகளின் ஆள்காட்டி விரல், நடுவரில் ஆகியவற்றுக்கு இடையே பந்தை வைத்து மெதுவாக வீசும் யார்கருக்கு பெயர் நக்குல் யார்கர்.

இந்த வகையான பந்துவீச்சை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் அதிகமாக வீசக்கூடியவர்.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று புவனேஷ்வர் குமார் அழைக்கப்பட்டாலும், ஐபிஎல் போட்டியில் இவரின் பந்துவீச்சு அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தில் உள்ள தட்டையான ஆடுகளத்தில் பந்துகள் வேகமாக, எகிறி வரும். அதுபோன்ற ஆடுகளத்தில் புவனஷ்வர் குமாரின் நக்குல் யார்கர் நன்கு எடுபடும்.

அதிலும் டெத்ஓவரில் பேட்ஸ்மேன்களின் பதற்றத்தை இதுபோன்ற பந்துவீச்சு அதிகரிக்கும். பந்தை சரியாக கணிக்க தவறினால், நிச்சயம் விக்கெட்டில்தான் இந்த நக்குல் யார்கர் முடியும்.

டாம் கரண்

இங்கிலாந்து அணியில் இந்த முறை மிகவும் எதிர்பார்க்கக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் டாம கரண். பல்வேறு வகையான யார்கர்களை வீச பயிற்சி எடுத்துவருவதாக டாம் கரண் சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதிலும் குறிப்பாக நக்குல் யார்கர்களுக்கு அதிகமாக உழைக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். இங்கிலாந்து அணியின் குறிப்பிடத்தகுந்த பந்துவீச்சாளர்களில் டாம் கரண் முக்கியமானவர்.

tom curr.jpg 

ஸ்லோ யார்கர் பும்ரா

வழக்கமான யார்கர்களைப் போலத்தான் இருக்கும், ஆனால், பேட்ஸ்மேன்களை பந்துவந்து சேரும் நேரம் குறைவாக இருக்கும். அதாவது பேட்ஸ்மேன் பேட்டை சுழற்றியபின் அவரை வந்சு சேரும். பெரும்பாலும் இதுபோன்று பந்துவீசுவதும், அதை சமாளித்து பேட் செய்வதும் மிகக் கடினம்.

இந்த ஸ்லோயார்கர்களை இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா அதிகமாக வீசக்கூடியவர்கள்.

உலகிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் பும்ரா என்று சச்சினால் புகழப்பட்டுள்ளார். பும்ராவின் பந்துவீச்சை எந்த நாட்டு அணியின் பேட்ஸ்மேனும் எளிதாக கணித்து ஆடிவிட முடியாது. வேகமாக கையில் இருந்து ரிலீஸ் ஆகும் பந்தும், ஸ்விங் ஆவதும் பேட் செய்ய  மிகக்கடினமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரக்கூடிய ஸ்லோ யார்கர்களை வீசுவதில் பும்ரா திறமையானவர். இந்த முறை உலக அணிகளே பும்ராவின் பந்துவீச்சை எதிர்பார்க்கிறது.

லசித் மலிங்கா

mainga.jpg 

இலங்கை வீரர் லசித் மலிங்கா அனுபவமான பந்துவீச்சாளர். டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்படக்கூடியவர் கடைசி ஓவர்களில் பதற்றமில்லாமல் வீசிய எதிரணியை தோல்வியில் தள்ளும் வல்லமை கொண்டவர் மலிங்கா.

யார்கர் கலையில் வல்லவரான மலிங்கா, ஸ்லோ யார்கர் மட்டுமின்றி, டிரடிஷனல் யார்கர்கள வீசுவதிலும் கை தேர்ந்தவர். அனுபவமும், வேகமும் நிறைந்த மலிங்காவின் பந்துவீச்சு இந்த முறை கவனத்தை ஈர்க்கும்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close