[X] Close

கோமதி மாரிமுத்துவுக்குச் சிக்கல்: தங்கப் பதக்கம் நிலைக்குமா? - ஊக்குமருந்து சோதனையில் சிக்கினார்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 21:32 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

கடந்த மாதம் தோஹா ஆசியப் போட்டிகளில் 800மீ தடகளத்தில்  தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளாதையடுத்து அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அனபாலிக்  ஸ்டெராய்டான நார்ஆண்ட்ரோஸ்டெரோன் என்ற மருந்தை எடுத்துக் கொண்டதாக ஊக்க மருந்து சோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று வந்துள்ளது. இதனையடுத்து தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து சோதனையில் தவறு  உறுதியானால் கோமதி மாரிமுத்து பதக்கம் பறிக்கப்படுவதோடு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவார்.

 

மார்ச் 13-15 தேர்திகளில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA), அவரது சிறுநீர் மாதிரியை சோதனைக்காக சேகரித்தது. இந்த மாதிரி தேசிய ஊக்கமருந்து சோதனைச் சாலையில் சோதனைக்குட்படுத்தப்பட்டது, அதாவது தோஹா ஆசியப் போட்டிகளுக்குப் பிறகு  இந்தச் சோதனை செய்யப்பட்டது.

 

இந்திய தடகள அமைப்பின் அதிகாரி கூறும்போது, “மாரிமுத்துவின் முதல் சோதனை பாசிட்டிவ்” என்று தெரிவித்துள்ளார்.

 

போலந்து ஸ்பாலாவில் முகாமில் கலந்து கொள்ளவிருந்தார் கோமதி மாரிமுத்து, ஆனால் இப்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதையடுத்து இவரது விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, பெங்களூருவில் நடைபெறும் தேசிய முகாமில் இருந்து அவரை கிளம்புமாறு உத்தரவிட்டுள்ளனர்.

 

இவரது பயிற்சியாளர் ஜஸ்விந்தர் சிங் பாட்டியா இந்தச் சர்ச்சையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். “பெடரேஷன் கோப்பைக்குப் பிறகு கோமதி மாரிமுத்து முகாமுக்குத் தேர்வு செய்யப்பட்டார். என்னுடன் குறுகிய காலமே இருந்தார். பிறகு தோஹா சென்றார்” என்கிறார் ஜஸ்விந்தர் பாட்டியா.

 

கிழிந்த ஷூ போட்டுக் கொண்டு ஓடியதாக கோமதி மாரிமுத்து தோஹா வெற்றிக்குப் பிறகு ஊடகங்களிடம் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் இதனையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு இந்திய தடகள ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close