[X] Close

சூழ்நிலைமைகள் அல்ல அழுத்தங்களைக் கையாள்வதுதான் சவால்: உ.கோப்பைக்கு புறப்படுவதற்கு முன்பாக விராட் கோலி பேட்டி


  • kamadenu
  • Posted: 21 May, 2019 18:43 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

கடினமான உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி இன்று புறப்படுகிறது. புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

அனைத்து அணிகளும் சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட்டில் ஆட இந்திய வீரர்கள் பணமழை ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ஆடிவிட்டு, நெடிய தொடர் ஆடிய களைப்பில் உலகக்கோப்பைக்குச் செல்கின்றனர்.

 

இந்திய அணியின் கடைசி சர்வதேச கிரிக்கெட் நினைவில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரில் இங்கு வாங்கிய 2-3 உதைதான் நினைவில் நிற்கும்.  ஐசிசி தரவரிசையில் இந்திய அணி 2ம் இடத்தில் உள்ளது.

 

2018 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி பலவெற்றிகளைப் பெற்றுள்ளது, கடைசியாக இங்கிலாந்தில் ஆடிய போது தொடரை இழந்தது. இந்நிலையில் விராட் கோலி தெரிவித்ததாவது:

 

நான் ஆடும் இந்த 3வது உலகக்கோப்பை முந்தைய 2 உலகக்கோப்பையைக் காட்டிலும் கடினமானது, காரணம் இந்த உலகக்கோப்பையில் அனைத்து அணிகளும் ஒருவரையொருவர் எதிர்த்து ஆடவேண்டிய வடிவமாகும்.

 

ஆப்கானிஸ்தான் அணியை 2015க்குப் பிறகு பார்த்தால் முற்றிலும் வித்தியாசமான அணியாக உள்ளது. எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்தும் வாய்ப்புள்ளது. இது எங்கள் மனதில் உள்ளது.

 

எங்கள் தரநிலை மற்றும் பலங்களுக்கு ஏற்ப ஆடினால் முடிவுகளில் சரியான இடத்தில் இருப்போம். இதுதான் முக்கியமானது. இதுவரை பெற்ற வெற்றிகளும் அப்படித்தான்.

 

ஒவ்வொரு போட்டியிலுமே முழுத்திறனை வெளிப்படுத்த வேண்டும் ஏனெனில் இங்கு முதலில் பிரிவு வாரியாக மோதி பிறகு முன்னேறுவது என்பது கிடையாது. அனைவருக்கு எதிராகவும் ஆடவேண்டும். இது ஒரு நல்ல விஷயம்தான். இது வேறு ஒருசவால், அனைத்து அணிகளும் விரைவாக இதற்கு தங்களை தகவமைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

 

எந்த ஒரு போட்டித் தொடருக்கும் முன்னால் போவது நல்லதுதான். உலகக்கோப்பை போன்ற தொடர்களில் முன்னமேயே இடத்துக்குச் செல்வது பதற்றத்தை தணிக்கும். இங்கிலாந்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் மற்ற இடங்களில் ஆடுவதிலிருந்து வேறுபாடு இல்லாதது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கு ஆடுவது முற்றிலும் வேறு ஒரு விஷயம். உலகக்கோப்பையில் அழுத்தம்தான் கையாள்வதற்கு மிக முக்கியக் காரணி சூழ்நிலைமைகள் அல்ல.

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் கூட அனைத்த் பவுலர்களும் வீசி வீசி களைப்படைந்து விடவில்லை.  முதற்படி அனைவரும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். இதனை ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே தெரிவித்து விட்டோம்.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close