[X] Close

ஐபிஎல்-ல் லெக் ஸ்பின்னரிடம் கோலி அவுட் ஆகிக் கொண்டேயிருந்தார்.. உலகக்கோப்பையில் அவரை வீழ்த்துவேன்: ஜோஃப்ரா ஆர்ச்சர்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 17:50 pm
  • அ+ அ-

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் பல சர்ச்சைகள், விவாதங்களுக்கு இடையே தேர்வு செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் போட்டிகள் ஏற்படுத்திய அழுத்தங்கள் உலகக்கோப்பைக்குத் தன்னை தயார் செய்ததாகத் தெரிவித்தார்.

 

உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வு செய்தபோது தனக்கு வந்த தகவல் பற்றி அவர் ஸ்கை ஸ்போர்ட்சில் பகிர்ந்து கொண்ட போது,  “6 மணி இருக்கும்.. எட் ஸ்மித்திடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, நான் ட்ரைவிங்கில் இருந்தேன். நான் போனைப்பார்க்காமலேயே பதில் அளித்தேன் பிறகுதான் காரை நிறுத்தி விட்டு போனை எடுத்துப் பேசினேன். எனக்கு அந்த மகிழ்ச்சி செய்தி அளிக்கப்பட்டது.

 

மற்ற வீரர்களைக் காட்டிலும் நம் அணியின் சில வீரர்களுக்கும் எனக்கும் உள்ள சாதகம் என்னவெனில் இங்கு ஆடவரும் வீரர்கள் சிலரை ஐபிஎல் கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம். ஆகவே அவர்கள் பலம், பலவீனம் அறிவோம், அதாவது யாரால் ஓட முடியும், யாரால் ஓட முடியாது, ரன்னிங் போன்ற உள் தகவல்கள் சில எனக்குத் தெரியும்.

 

சர்வதேச கிரிக்கெட்டில் என்ன தீவிரம் உண்டோ அதே தீவிரம் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் உண்டு என்பதுதான் என் நேர்மையான கருத்து. அங்கு அழுத்தம் அதிகம் இந்த அழுத்தம்தான் என்னை உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் தயார்படுத்தியுள்ளது.

 

இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன், ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை, காரணம் ஒவ்வொரு முறையும் அவர் லெக் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்தார்.  ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு வீச ஆசை, அது உலகக்கோப்பையில் சாத்தியமில்லை, எனவே கிறிஸ் கெய்ல் விக்கெட்டை வீழ்த்தவும் விரும்புகிறேன்.

 

பட்லர், இவரும் 360 டிகிரி கிரிக்கெட்டர்தான். எங்கு வேண்டுமானாலும் பந்து வீச்சை அவர் அடிக்கக் கூடிய திறமை படைத்தவர். அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் பென் ஸ்டோக்ஸுடன் பேச ஐபிஎல்-ல் வாய்ப்பு கிடைத்தது. எனவே உலகக்கோப்பையில் பேட் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் எதிர்முனையில் தெரிந்த பென் ஸ்டோக்ஸ் இருந்தால் எனக்கு பதற்றத்தை அது  தணிப்பதாக அமையும்.

 

ஆஷஸ் தொடருக்கும் என்னை தேர்வு செய்தால் என்னைக் கையில் பிடிக்க முடியாது, ஆனால் இப்போதைக்கு என் கவனம் முழுதும் உலகக்கோப்பைதான்” என்றார் ஜோப்ரா ஆர்ச்சர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close