[X] Close

உறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள் பார்வையில் தோனி: ஒரு சுவாரஸ்ய ட்ரிப்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 15:53 pm
  • அ+ அ-

ஸ்போர்ட்ஸ்டார் இதழ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்குச் சென்று தோனியின் உறவினர்கள், நண்பர்கள், அவரது ஆசிரியர்கள் இன்னபிறரைச் சந்தித்து தோனி பற்றி சுவாரசியமான தகவல்களைத் திரட்டியுள்ளது.

“மாஹி (தோனி) கால்பந்தாட்டத்திலிருந்து கிரிக்கெட் வீரர் ஆனார், நான் கிரிக்கெட் வீரராக இருந்து கால்பந்தாட்டத்துக்கு மாறினேன்” என்கிறார் அதிகம் அறியப்படாத தோனியின் 10 வயது மூத்த சகோதரர் நரேந்திர சிங் தோனி.

அவர் மேலும் கூறும் போது, “நான் கிரிக்கெட் ஆடும் போது மாஹிக்கு சிறிய வயது, அதனால் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிற்பாடு பள்ளிக்கால்பந்து அணிக்காக நான் கோல் கீப்பராக இருந்த போது சர்வதேச கிரிக்கெட்டையும் கூர்ந்து கவனித்து வந்தேன்.

DHONI-AND-FOOD.jpg 

தோனி தலைமையில் வென்ற இரண்டு உலகக்கோப்பையில் மாஹியின் கேப்டன்சி முக்கியப் பங்களிப்பு 2007 உலக டி20 தொடர் இறுதியில் பாகிஸ்தான் கடைசி விக்கெட்டை வீழ்த்த ஷார்ட் பைன் லெக்கில் பீல்டரை நிறுத்தியது 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில்  முன்னால் களமிறங்கி ஆட்டத்தை முடித்துக் கொடுத்தது. இம்முறை தோனியின் பங்கு வித்தியாசமானது, ஆனால் முக்கியமானது. ஆனால் எனக்கும் தோனிக்கும் வயது வித்தியாசம் இருக்கிறது, இதனால் பேசுவதே அரிது, அதுவும் கிரிக்கெட் பற்றி பேசியதில்லை” என்றார்.

 

முன்னாள் ராஞ்சி பல்கலைக் கழக பயிற்சியாளர் ஜெயந்த் சின்ஹா... கூறும்போது  “தோனிக்கு மாற்று யாரும் இல்லை, இந்திய அணிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இரண்டு தினுசாகவும் பேட் செய்யக் கூடியவர் தோனி, 4ம் நிலைக்கு மிகப்பொருத்தமானவர்” என்றார்

தோனி தொடக்க வீரர் முதல் நம்பர் 10 நிலைவரை பள்ளிக் கிரிக்கெட்டில் இறங்கியுள்ளதாக தோனியின் கரியரை வடிவமைத்த பட்டாச்சாரியா தெரிவிக்கிறார்.

தோனிக்கு ரயில்வே வேலை வாங்கிக் கொடுக்க உதவிய முக்கிய நண்பர் சத்ய பிரகாஷ் கூறும்போது, “நாங்கள் அவரை ‘பயங்கரவாதி’ என்றுதான் அழைப்போம். 20 பந்துகளில் 40-50 ரன்களை அடிப்பார். ஆனால் நாட்டுக்காக ஆடும்போது அவர் கிட்டத்தட்ட சாமியாராகி விட்டார். அணுகுமுறையை மாற்றி விட்டார். நன்றாகக் கற்றுக் கொள்ளக்கூடியவர்” என்றார்.

அண்ணன் நரேந்திர சிங் மீண்டும் கூறிய போது, “ஒருநாள் கிரிக்கெட்டில் 5,6, 7 ஆகிய நிலைகளி இறங்கி 10,000 ரன்கள் அடித்த வீரர்கள் யாராவது இருக்கிறார்களா? என்றார்.

தீபக் சிங் என்பவர் தோனியின் பேட்ச் மேட் ஆவார். தென் கிழக்கு ரயில்வே அணியில் இருவரும் ஆடியுள்ளார்கள், தோனியுடன் நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்புகள் இனிய நினைவுகளைப் பகிரும் போது, மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்று கீழே விழுந்தது, இன்னொரு சக வீரரை பேய் மாதிரி உடையை அணிவித்து நள்ளிரவில் காரக்பூர் தெருக்களில் பீதியை கிளப்பியது என்று விளையாட்டு எம்.எஸ்.டி.யின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தினார்.

“2003-ல் இந்தியா-ஆஸ்திரேலியா உ.கோப்பை போட்டியை டிவியில் பார்த்தோம் பார்த்திவ் படேல் இந்திய அணியின் ரிசர்வ் கீப்பர், திராவிட் விக்கெட் கீப்பர்,  அப்போது ‘நீ எப்ப இந்தியாவுக்கு ஆடப்போற?” என்று கேட்டோம், அதற்கு தோனி,  ‘என் அதிர்ஷ்டம் நல்லதாக இல்லாமல் இருக்கலாம், அதற்காக இந்தியாவுக்காக நான் ஆடவே முடியாது என்ற அளவுக்கு என் அதிர்ஷ்டம் மோசமில்லை’ என்றார், இதுதான் மாஹியின் தன்னம்பிக்கை என்றார்.

DHONI-TEMPLE.jpg 

மிகவும் எளிமையான வாழ்க்கையை விரும்பும் தோனி இப்போது 5 நட்சத்திர விடுதிகள், அந்த வகை உணவுகள் என்று மாறியுள்ளாரே என்று கேட்ட போது அவர் நண்பர் சத்யபிரகாஷ், “பசியைப் போக்கிக் கொள்ள 5 நட்சத்திர விடுதி தேவையில்லை, நல்ல உறக்கத்துக்கும் அது தேவையில்லை” என்றுதான் தோனி உணர்கிறார் என்றார்.

வளரும் காலக்கட்டத்தில் தோஹி நாளொன்றுக்கு 7 மணி நேரம் பயிற்சி எடுப்பார் என்றும், ஸ்னூக்கர், பாட்மிண்டன், டென்னிஸ் என்று விரைவில் கற்றுக் கொண்டு அனைத்திலும் வெற்றி பெறவே தோனி விரும்புவார் என்றும் லோக்கல் டோர்னமெண்ட்டிற்கு தோனியை அழைத்து ஆடவைத்த லக்கி ஸ்வைன் என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார், அதாவது தோனி அங்கு மிகவும் பிரபலம், சிலபல வீடுகளில் அவரை உணவுக்காக அழைத்து, அவரும் சென்று சாப்பிட்டுள்ளார் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் முன்னாள் வீரர் கிழக்கு மண்டல அணித்தேர்வாளர் பிரணாப் ராய் கூறும்போது, “தோனி ஒரு பிறவி போராளி, எதிரணி பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். தன் வேலையில்தான் மும்முரமாக இருப்பார். நான் இவரைப் பரிந்துரை செய்த போது கங்குலி, அணித்தேர்வுக்குழுவினரை முதலில் திருப்தி செய்ய முடியவில்லை. ஆனால் தோனி நிரூபித்தார். அப்போது பயிற்சியாளர் கிரெக் சாப்பலிடம் பேசிய போது தோனி ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாவார் என்று கூறியது எனக்கு நினைவில் உள்ளது” என்றார்

தோனிக்கு கடவுள் பக்தி அதிகம், 2011 உலகக்கோப்பைக்கு முன் யாகம் செய்தார் கோப்பையை வென்றார் தேவ்ரி கோயிலில் உள்ள கடவுள் மீது மிகுந்த பக்தி உடையவராம் தோனி.

ஆசிரியர்: ஒய்.பி.சாரங்கி (ஸ்போர்ட்ஸ்டார்)

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close