[X] Close

உலகக்கோப்பை அணியை உறுதி செய்தது இங்கிலாந்து: துரதிர்ஷ்டசாலி டேவிட் வில்லே; அதிர்ஷ்டசாலி ஜோப்ரா ஆர்ச்சர்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 14:54 pm
  • அ+ அ-

வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோ டென்லிக்குப் பதில் லியாம் டாஸன், துரதிர்ஷ்டசாலி டேவிட் வில்லேவுக்கு பதில் அதிர்ஷ்டசாலி ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் உள்ளார்.

மே 30ம் தேதி முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அலெக்ஸ் ஹேல்ஸ் ஒழுங்கு நடவடிக்கைக் காரணமாக இடம்பெறாததால் ஜேம்ஸ் வின்ஸ் அணியில் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

ஹாம்ப்ஷயர் அணிக்காக லியாம் டாஸன் அருமையாக ஆடியுள்ளார், ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைப் போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பேட்டிங்கில் 274 ரன்களை 45.66 என்ற சராசரியில் ஒரு சதத்துடன் எடுத்துள்ளார்.

டேவிட் வில்லே ஏற்கெனவே ஜோப்ரா ஆர்ச்சரினால் தன் இடம் பறிபோகும் என்று கூறியிருந்தார், அதுதான் நடந்துள்ளது.

இங்கிலாந்து அணி விவரம்:

இயான் மோர்கன் (கேப்டன்)

ஜேசன் ராய்

ஜானி பேர்ஸ்டோ

ஜேம்ஸ் வின்ஸ்

ஜோ ரூட்

பென் ஸ்டோக்ஸ்

ஜோஸ் பட்லர்

மொயின் அலி

ஆதில் ரஷீத்

லியாம் டாஸன்

கிறிஸ் வோக்ஸ்

லியாம் பிளன்கெட்

ஜோப்ரா ஆர்ச்சர்

டாம் கரன்

மார்க் உட்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close