[X] Close
 

ஒரே நாளில் 1500 கலோரிகளை எரித்தேன்: ஹிட்டடித்த ஹர்பஜனின் காமெடி ட்வீட்


harbhajan-singh-easily-burnt-1500-calories-in-a-day

  • பாரதி
  • Posted: 31 May, 2018 14:57 pm
  • அ+ அ-

ட்விட்டர் முழுவதும் அண்மைக்காலமாக ஃபிட்னஸ் சேலஞ் ட்வீட்கள் வியாபித்துக் கிடக்கின்றன. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆரம்பித்துவைத்த அந்த சேலஞ்ச் கோலி, மோடி என நீண்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்திருந்தார். அதில் ஒரே நாளில் 1500 கலோரிகளை எரித்துவிட்டேன் எனப் பதிவிட்டிருந்தார். இதில் என்ன ஹாஸ்யம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா? அந்த ட்வீட்டின் கீழ் அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.

அந்தப் புகைப்படத்தில் ஒரு தட்டில் 7 சமோசாக்கள் கருகிய நிலையில் இருந்தன. அதைத்தான் அவர் நகைச்சுவையாக 1500 கலோரிக்களை எரித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஹர்பஜனின் அந்த ட்வீட்டுக்கு பதில்கள் குவிந்தன. சிலர், ஐபிஎல் போட்டியில் தோற்றுப்போன மற்ற 7 அணிகளைத்தான் பாஜி அப்படிக் கிண்டலடித்துள்ளார் என அவர்களாகவே கற்பிதங்களைக் கொட்டியுள்ளனர்.

ஹர்பஜனின் இந்த காமெடி ட்வீட்தான் இப்போது ட்விட்டரில் ஹிட்.

தொடர்புடைய செய்திகள்

 



MGR - Kindle Edition


[X] Close