[X] Close

இந்தியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? - முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் அறிவுரை


10-2

  • kamadenu
  • Posted: 20 May, 2019 18:29 pm
  • அ+ அ-

-பிடிஐ

வரவிருக்கும் 2019 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காதான் கோப்பையை வெல்லும் அணி என்ற பட்டயம் இல்லாதது அந்த அணிக்கு ஒரு மறைமுக ஆசீர்வாதமே எந்த இடத்திலிருந்தும் தெ.ஆ. தோற்கும் என்பதை அடையாளப் படுத்தும் ‘சோக்கர்ஸ்’ என்பதை போக்க வேண்டுமெனில் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பையை வென்றேயாக வேண்டும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் தெரிவித்துள்ளார்.

 

“ஐசிசி உலகக்கோப்பையை வெல்லாமல் தெ.ஆப்பிரிக்கா அணி தன் மீதான ‘சோக்கர்ஸ்’ அடையாளத்தை நீக்குவது கடினம். 1999-ல் சிறந்த அணியாக இருந்தது, ஆனாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை.

 

இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்று கூறப்படும் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி இல்லை. இதனால் பார்வையிலிருந்து எளிதில் மறைந்து அரையிறுதி வரை வந்து விட்டால் அங்கிருந்து கோப்பையை வெல்லலாம்.

 

இந்திய அணி கிரேட் ஒருநாள் போட்டி அணி, இவர்களை வீழ்த்துவது கடினம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போலவே இந்தியாவையும் எளிதில் வீழ்த்தி விட முடியாது. இங்கிலாந்து பெரிய அச்சுறுத்தல்தான், ஆனால் தொடரை நடத்தும் அணி என்பதால் அவர்களும் நெருக்கடியில், அழுத்தத்தில் ஆடுவார்கள்.

wessels.jpg 

 இந்திய அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்கும் சூழல் ஏற்படலாம் அப்போது விராட் கோலி 4ம் நிலையில் இறங்குவது அணிக்கு ஸ்திரத்தன்மையையும், இன்னிங்சை கட்டமைக்கவும் உதவும், ஆனால் இது எளிதான முடிவல்ல, ஏனெனில் அவர் 3ம் நிலையில் பிரமாதமாக ஆடி பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். ஆனால் நான் அவர் 4ம் நிலையில் இறங்குவதை எதிர்பார்க்கிறேன்.

 

ஜூன் - ஜூலை உஷ்ணமாக இருக்கும், பகல் ஆட்டங்களில் அணிகள் 300-320 ரன்களை குவிப்பது சகஜமாக இருக்கலாம். ஒவ்வொரு பிட்சும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். பவுலர்களுக்கும் வாய்ப்பு இருக்கும் என்றே கருதுகிறேன்” என்றார் கெப்ளர் வெசல்ஸ்.

 

கெப்ளர் வெசல்ஸ் ஆஸ்திரேலியா, பிறகு தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் ஆடிய அதிசய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close