[X] Close

கடைசி 20-30 ஆண்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றைப்பாருங்கள்: பேட்ஸ்மென்கள் ஆதிக்கம் பற்றி மொகமது ஷமி


20-30

  • kamadenu
  • Posted: 20 May, 2019 16:29 pm
  • அ+ அ-

கடந்த 5-7 ஆண்டுகளில்தான் பவுலர்களுக்குச் சாதகமாக இந்தியப் பிட்ச்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன அதற்கு முன்பாக பேட்டிங் சாதக ஆட்டக்களங்களே அதிகம் என்று மொகமது ஷமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கடந்த 2018 தொடக்கம் முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அணி இந்திய அணியே என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் கூட்டணியே. சில வேளைகளில் உமேஷ் யாதவ் பங்களித்துள்ளார்.

 

இந்நிலையில் ஐ.எ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஷமி,  “கடந்த 20-30 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பாருங்கள், எப்போதும் பேட்ஸ்மென்கள் ஆதிக்கம்தான். பவுலர்களை நாம் குறைகூற முடியாது. தயாரிக்கப்பட்ட பிட்ச்கள் பவுலர்களுக்கு உதவிகரமாக இருந்ததில்லை.

 

கடந்த 5-7 ஆண்டுகளாகத்தான் விஷயங்கள் மாறத்தொடங்கின. இது ஒரு பெரிய தொடர் நடவடிக்கை ஒரே இரவில் நடந்த மாற்றமில்லை. நாங்களும் ஒரு அணியாகத் திரண்டு பந்து வீசுகிறோம் அதுதான் உதவுகிறது.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வீசுவதோடு எங்கள் பந்து வீச்சில்  வேகமும் உள்ளது.  திறமையும் வேகமும் ஒன்று சேரும் போது பந்து வீச்சு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இன்று நம் பந்து வீச்சு உலகின் தலைசிறந்த பந்து வீச்சு என்று கூறுகிறார்கள் என்றால் உண்மையில் நாங்கள் பெருமைப்படுவதற்குரியதாகும். முன்னால் இப்படி கூறப்பட மாட்டது, இன்று கூறுகிறார்கள் என்றால் அது எங்கள் வலுவைக் காட்டுகிறது” என்றார்.

 

2015 ஆஸ்திரேலிய உலகக்கோப்பைத் தொடரில் ஷமி 17 விக்கெட்டுகளை 17.29 என்ற சராசரியில் கைப்பற்றி அசத்தினார்.

 

நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமீபமாக அதிகம் ஆடவில்லை, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எனக்கு மீண்டும் நம்பிக்கைப் பிறந்தது. இதே நம்பிக்கையுடன்  தான் ஐபிஎல் கிரிக்கெட்டையும் ஆடினேன். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சீராக ஆடியதும் எனக்கு உதவியது” என்றார் ஷமி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close