[X] Close

குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு மைதானம் திரும்பிய ஜேசன் ராய்: உணர்ச்சிகர சதம் பற்றி நெகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 18 May, 2019 15:56 pm
  • அ+ அ-

நாட்டிங்கமில் நேற்று மீண்டும் ஒரு மகாவிரட்டலை வெற்றியாக மாற்ற உதவியது இங்கிலாந்து தொடக்க வீர்ர் ஜேசன் ராயின் இன்னொரு அதிரடி சதம். பாகிஸ்தானை 3-0 என்று முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து.

 

மிகப்பிரமாதமாக ஆடிய ஜேசன் ராய் 114 ரன்க்ளை அதிரடியாக எடுத்து இங்கிலாந்து வெற்றியை எளிதாக்கினார். வெற்றியை எளிதாக்கிய ஜேசன் ராய்க்கு அதற்கு முதல் நாள் இரவு எளிதாக அமையவில்லை.

 

பிறந்து 7 வாரங்களே ஆன தன் கைக்குழந்தை எவர்லிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரை அதிகாலை 1.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு 8.30 மணிக்குத் திரும்பி 2 மணிநேரமே உறங்கிய பிறகு பயிற்சிக்கு முன்பாக மைதானத்துக்குத் திரும்பி சதம் அடித்துள்ளார் ஜேசன் ராய். ஆட்டம் முடிந்து உடனடியாக மீண்டும் மருத்துவமனை திரும்பினார் ஜேசன் ராய்.

 

இந்த ‘உணர்ச்சிகர’ இன்னிங்ஸ் பற்றி ஜேசன் ராய் கூறும்போது, “இது என்னுடைய சரளமான இன்னிங்ஸ் என்று நான் கூற மாட்டேன்.  காலை கொஞ்சம் கடினமான நேரமாக அமைந்தது. இந்தச் சதம் எனக்கும் என் குடும்பத்துக்கும் சிறப்பானதாகும்.

 

1.30மணியளவில் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றோம் காலை 8.30 மணி வரை அங்கு இருந்தேன். பிறகு 2 மணி நேரமே தூங்கினேன். பயிற்சி தொடங்கிய சில நிமிடங்களில் மைதானம் வந்தேன். இது மிகவும் உணர்ச்சிகர்மான நூறாகும்.

 

இங்கிலாந்து வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் விட்ட கேட்ச்களும் மோசமான தரை பீல்டிங்கும் பிரதான காரணமாகும். இப்படிப்பட்ட பீல்டிங்கையும், கேட்சிங்கையும் வைத்துக் கொண்டு பாகிஸ்தான் உலகக்கோப்பை வெற்றிக் கனவைக் கூட காண முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சாடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close