[X] Close

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 'டாஸால்' வந்த சிக்கல்: தோனிக்கும், சங்கக்கராவுக்கும் நிகழ்ந்த வாதம்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 13:02 pm
  • அ+ அ-

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் போடுவதில் ஏற்பட்ட சிக்கலால், இந்திய அணியின் கேப்டன் தோனிக்கும், இலங்கை  கேப்டன் சங்கக்கராவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டி மும்பை வான்ஹடே மைதானத்தில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்தது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து இலங்கை மோதியது. இந்த போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்தது. 275 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. கம்பீரின் 97 ரன்கள், தோனி ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் சேர்த்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இந்த போட்டியைக் காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வான்ஹடே அரங்கில் இருந்தால், சத்தம் காதைப் பிளந்தது. டாஸ் போடுவதற்கு கேப்டன் தோனி, இலங்கை கேப்டன் சங்கக்கரா இருவரும் வந்தனர். வர்னணையாளர் ரவி சாஸ்திரி, போட்டி நடுவர் ஜெப் குரோவ் ஆகியோரும் இருந்தனர்.

toss.png 

தோனி காயினை சுண்டிவிட்டபோது சங்கக்கரா தலைகவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார். தோனி காயினை தூக்கிவிட்டதும், சங்கக்கரா தலை(ஹெட்) என்று கேட்டார். ஆனால், அவர் கேட்டது தோனிக்கும், வர்ணனையாளர் ரவி சாஸ்த்திரி, நடுவர் குரோவ் ஆகிய இருவருக்கும் கேட்கவில்லை. ஏனென்றால், அரங்கில் இருந்த ரசிகர்கள் சத்தம் அதிகமாக இருந்தது.

ஆனால், காயினில் தலை விழுந்ததும் தோனி பேட்டிங் என்று கேட்க ரவி சாஸ்திரி இந்தியா பேட்டிங் செய்கிறது என்று அறிவித்தார். ஆனால், சங்கக்கரா குறுக்கிட்டு, நான்தான் காயினில் ஹெட் கேட்டேன், எப்படி தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கொடுக்கலாம் என்றார்.

உடனே நீங்கள் கேட்டீர்களா என்று ரவிசாஸ்திரி கேட்க, ஆம் நான் ஹெட் கேட்டேன் என்று சங்கக்கரா பதில் அளித்தார். இதனால், சிறிதுநேரம் குழப்பம் ஏற்பட்டது. தோனி பேட்டிங் செய்வதில் இருந்து பின்வாங்க முடியாது. நான் ஹெட் கேட்டேன் விழுந்துவிட்டது, நாங்கள்தான் பேட்டிங் செய்வோம் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

india.jpg 

இதனால், அந்த இடத்தில் சிறிதுநேரம் குழப்பம் ஏற்பட்டது. அதன்பின் இருவரையும் சமாதானம் செய்த போட்டி நடுவர் ஜெப் குரோவ், அரங்கில் இருந்த ரசிகர்கள் போட்ட சத்தத்தால் தனக்கு ஏதும் கேட்கவில்லை ஆதலால் மீண்டும் டாஸ் போடுவதற்கு இரு கேப்டன்களும அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதைக் கேட்டு தோனியும், சங்கக்கராவும் அமைதியடைந்து, சம்மதித்தனர். மீண்டும் தோனி டாஸ் காயினை தூக்கிபோட்டார். சங்கக்கராவுக்கு சாதகமாக ஹெட் விழுந்தவுடன் இலங்கை அணி பேட் செய்தது.

இறுதிப்போட்டியில் இருமுறை டாஸ் போட்ட விவகாரம் இணையதளத்தில் எதிரொலித்து பெரும் விவாதப் பொருளாதானது.

டாஸ் போடும் போது சங்கக்கரா ஏன் டாஸ் காயினைப் பார்க்காமல் தலைகவிழ்ந்து இருந்தார் என்று ஒருபுறம் கேள்விகளும், தோனியிடம் அவசரப்பட்டு ஏன் ரவிசாஸ்திரி என்ன முடிவு செய்யப்போகிறீர்கள் என்று கேட்டார், சங்கக்கராவிடம் ஏன் கேட்கவில்லை என்று கேள்விகள் எழுந்தன.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். ஆனால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தோற்றது. முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்திருந்த தோனி, சேஸிங் செய்து உலகக்கோப்பையை  வென்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close