[X] Close

முறியடிக்கப்படாத சச்சின் சாதனை: 1975 முதல் 2015 வரை உலகக் கோப்பையில் விளாசிய வீரர்கள்: ஓர் அலசல்


1975-2015

  • kamadenu
  • Posted: 16 May, 2019 15:57 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

கடந்த 1975-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இரு உலகக்கோப்பைப் போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்த வீரர் எனும் சாதனையை வைத்துள்ளார்.

அதிலும் சச்சின் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அடித்த ரன்களை இதுவரை எந்த நாட்டு வீரரும் முறியடிக்கவில்லை என்பது முத்தாய்ப்பாகும்.

12-வது ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 46 நாட்கள் நடக்கும் இந்த போட்டித் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின்முறையில் நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றஅணிகளுடன் ஒவ்வொரு முறை மோத வேண்டும்,வெற்றியின் அடிப்படையில் அடுத்தச்சுற்றுக்குச் செல்லும்.

கடந்த 1975-ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பைப்போட்டி முதல், கடைசியாக 2015-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடர் வரை அதிகமான ரன்கள் சேர்க்கும் வீரர் குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். வழக்கமான போட்டித் தொடர்களில் சொதப்பலாக விளையாடிய வீரர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நேரமும் உண்டு.

அந்த வகையில் கடந்த 1975-ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் டர்னரும், கடைசியாக நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலும் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களாக இருக்கிறார்.

 ஒவ்வொரு ஆண்டும் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

மே.இ.தீவுகளின் முதல் கோப்பை

ஐசிசி சார்பில் முதல் முறையாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட உலகக்போப்பைப் போட்டி இதுவாகும். இந்த போட்டித்தொடரில் மொத்தம் இந்தியா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான்  கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிளைவ் லாய்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணி கோப்பையை வென்றது. இந்த தொடரில் நியூசிலாந்து வீரர் கிளென் டர்னர் 4 போட்டிகளில் 333 ரன்கள் சேர்த்து  அதிகமான ரன்கள் சேர்த்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

அரையிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிராக 171 ரன்களும், இந்தியாவுக்கு எதிராக 114 ரன்களும் டர்னர் சேர்த்து 166 ரன்கள் சராசரியாக வைத்திருந்தார்.

2-வது முறையாக சாதித்த லாய்ட் அணி

1979-ம் ஆண்டு 2-வது உலகக் கோப்பைப் போட்டி, இங்கிலாந்தில் நடந்தது. இந்த போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்றன, முதல் உலகக் கோப்பைப் போட்டியில்இடம் பெற்ற கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு பதிலாக, கனடா இடம் பெற்றது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிளைவ் லாய்ட்  தலைமையிலான மே.இ.தீவுகள் 2-வது முறையாக கோப்பையை  வென்றது.

இந்த போட்டித் தொடரில் அனைத்து விதங்களில் சிறப்பாகச் செயல்பட்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி சிம்ம சொப்னமா திகழ்ந்த, அனைத்து அணிகளையும் மிரட்டிப்பார்த்தது. அந்த அணி வீரர் கார்டன் கிரீனிட்ச் 4 போட்டிகளில் 253 ரன்கள் குவித்து அதிகமான ரன் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். பிர்மிங்ஹாமில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக கிரீனிட்ச் 134 ரன்கள் சேர்த்தார்.

மறக்க முடியாத கபில்தேவ் தலைமை

இங்கிலாந்தில் 1983-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைபையை இந்தியர்கள் யாரும் மறக்க முடியாது. முதல்முறையாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்று முத்தமிட்டது. இந்த முறை 8 அணிகள் பங்கேற்றன, கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம் பெற்ற கனடா அணிக்குப் பதிலாக ஜிம்பாப்வே அணி இடம் பெற்றது.

 அரையிறுதிக்கு இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேஇதீவுகள் அணிகள் தகுதிபெற்றது. மூன்றாவது முறையாக மே.இ.தீவுகள் கோப்பையைக் கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

 ஆனால், இறுதிப்போட்டியில் யாரும் எதிர்பாரா வகையில் கபில்தேவ், மதன்லால் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சில் மே.இ.தீவுகள் அணியை 43 ரன்களில் வென்றது இந்திய அணி. இந்த தொடரில் இங்கிலாந்து வீரர் டேவிட் கோவர் அதிகபட்சமாக 7 ஆட்டங்களில் 384 ரன்கள் குவித்தார். இதில் இவரின் சராசரி 76.80 ஆக இருந்தது. விவியன் ரிச்சர்ட்ஸ் 367 ரன்கள் சேர்த்து 2-ம் இடம் பிடித்தார்.

ராசியில்லாத இங்கிலாந்து (1987)

Gooch-1987.jpg 

முதல்முறையாக உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்துக்கு வெளியே, இந்தியா, பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. ஒருநாள் போட்டியில் ஓவர்கள் 60லிருந்து 50 ஆகக் குறைக்கப்பட்டது. இந்த முறை 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு 2-வது முறையாக இங்கிலாந்து அணி முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் 7 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச் 471 ரன்கள் சேர்த்து அதிக ரன் சேர்த்தவர்களில் முதலிடம் பிடித்தார். இந்த தொடர் முழுவுதம் கூச் 45 பவுண்டிரிகள் அடித்தார். ஒரு சதம், 3 அரைசதங்களை கூச் அடித்தார். இந்த முறையும் இங்கிலாந்து அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை

1992- உலகக் கோப்பை

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி நடந்தது. இந்த தொடரில் வழக்கமான 8 அணிகளுடன், தென் ஆப்பிரிக்க அணி இடம் பெற்று 9 அணிகள் மோதின. அரையிறுதிக்கு இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தகுதிபெற்றன. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 22 ரன்களில் வீழத்தி இம்ரான் கான் தலைமையிலான அணி கோப்பையை வென்றது.

இந்த தொடரில் நியூசிலாந்து வீரர் மார்டின் கிரோவ் 456 ரன்கள் சேர்த்து அதிகமான ரன் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 114 ரன்கள் சராசரியாகவும், 90 ஸ்டிரைக்ரேட்டாகவும் குரோவ் வைத்திருந்தார். ஒரு சதம், 4 அரைசதங்களை குரோவ் அடித்திருந்தார்.

500 ரன்களைத் தொட்ட சச்சின்

6-வது உலகக் கோப்பைப் இந்தியா, இலங்கை, பாகிஸ்தானில் நடந்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா, இலங்கை, மே.இதீவுகள், ஆஸ்திரேலிய அணிகள் தகுதிபெற்றன. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ரனதுங்கா தலைமையில் இலங்கை அணி கோப்பையை வென்றது.

sachin.jpg 

இந்த தொடரில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 523 சேர்த்து அதிக ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். முதல்முறையாக 500 ரன்களுக்கு மேல் உலகக் கோப்பையில் சேர்த்த முதல் வீரர் சச்சின்தான். இதில் சச்சின் சராசரி 87 ஆகவும், ஸ்ட்ரைக்ரேட் 85 ஆகவும் இருந்தது. இந்த தொடரில் சச்சின் 2 சதங்களும், 3 அரைசதங்களையும் அடித்தார். இலங்கைக்கு எதிராக 137 ரன்களை சச்சின் சேர்த்தது சாதனையாகும்.

இந்திய அணியின் 'சுவர்' டிராவிட்

7-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பேட்டிங் செய்வதற்கு கடினமான சூழலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் சிறப்பாக பேட் செய்து 8 ஆட்டங்களில் 461 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். இதில் சராசரியாக டிராவிட் 65 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 85.62 வைத்திருந்தார். இலங்கைக்கு எதிராக டான்டனில் 145 ரன்களை டிராவிட் சேர்த்தது அதிகபட்சமாகும். டிராவிடுடன் ஆடிய கங்குலி 183 ரன்கள் சேர்த்தார். இந்த தொடரில் டிராவிட் 49 பவுண்டரிகளும், ஒருசதம், 3 அரைசதங்களையும் அடித்திருந்தார்.

rahul dra.jpg 

2003 சச்சினின் தொடர்

8-வது உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாப்பே ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இறுதிப்போட்டியில் இந்திய அணியை 125 ரன்களில் வீழ்த்தி ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

இந்தத் தொடரில் 11 ஆட்டங்களில் 673 ரன்கள் சேர்த்து சச்சின் தனி முத்திரை பதித்தார். சச்சின் சராசரி இந்த தொடரில் 61 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 89 ஆகவும் இருந்தது. இப்போதுவரை இந்த தொடரில் சச்சின் அடித்த ரன்களை எந்த அணி வீரரும் முறியடிக்கவில்லை. இந்த தொடரில் சச்சின் 6 அரைசதங்களும், ஒருசதமும் விளாசினார். நமிபியாவுக்கு எதிராக 152 ரன்களை சச்சின் அடித்தது அதிகபட்சமாகும்.

ஆஸி.3-வது முறை சாதனை(2007)

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் நடந்த இந்த உலகக்கோப்பைப் போட்டி பலசர்ச்சைகளை சந்தித்தது. பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமாக இறந்தார், இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது. இறுதிப்போட்டியில், இலங்கை அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா வென்று 3-வது முறையாக கோப்பையை வென்றது.

hayden.jpg 

இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன் 10 போட்டிகளில் 659 ரன்கள் விளாசினார். சராசரியாக 73 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 101 ஆகவும் ஹெய்டன் வைத்திருந்தார். 3 சதங்களையும், ஒரு அரைசதத்தையும் இந்த தொடரில் ஹெய்டன் அடித்தார். அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஹெய்டன் 158 ரன்கள் சேர்த்தார்.

தோனியின் தலைமையில் கோப்பை

1983-ம் ஆண்டுக்குப்பின் இந்தியக் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் ஒரு பொற்காலம் வந்தது. ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப்பின் இந்த உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை  ரசிகர்களால் மறக்க முடியாது.

ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து இந்த உலகக் கோப்பையை நடத்தின. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 3-முறை சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை காலிறுதியில் இந்தியஅணி அடித்துத் துரத்தியது.

dilsan.jpg 

இந்த தொடரில் இலங்கை வீரர் திலரத்னே தில்ஷன் 500 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாக அமைந்தது. சச்சின் டெண்டுல்கல் 2-வதாக 482 ரன்கள் குவித்திருந்தார். தில்சன் சராசரியாக 62 ரன்களும், அதிபட்சமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 144 ரன்களும் சேர்த்திருந்தார்.

கப்திலின் மிரளவைக்கும் இரட்டை சதம்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த உலகக் கோப்பைப் போட்டி நடந்தது. இறுதிப்போட்டிவரை முதல் முறையாக நியூசிலாந்து அணி முன்னேறியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

guptil.jpg 

உலகக் கோப்பை வரலாற்றிலேயே இரட்டை சதத்தை நியூசிலாந்து வீர்ர மார்டின் கப்தில் இந்த தொடரில் அடித்து சாதனை படைத்தார். மே.இ.தீவுகள்அணிக்கு எதிராக 237 ரன்களை கப்தில் அடித்து தொடரில் 547 ரன்களைக் குவித்தார். கப்தில் சராசரி இந்த தொடரில் 68 ரன்களாகவும், ஸ்ட்ரைக் ரேட் 104 ஆகவும் இருந்து இந்த தொடரில் கப்தில் ஒரு அரைசதம், இரு சதங்களை அடித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close