[X] Close

பயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால் தோனி அளிக்கும் வினோத தண்டனை: பேடி அப்டன் சுவாரஸ்ய தகவல்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:36 am
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

பயிற்சிக்குத் தாமதமாக வரும் வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி அளிக்கும் வினோத தண்டனை குறித்து முன்னாள் பயிற்சியாளர் பேடி அப்டன் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் உளவியல் பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் "தி பேர்ஃபூட் கோச்"( The Barefoot Coach)  என்ற தலைப்பில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இருக்கும் சில விஷயங்களை அப்டன் நேற்று சுவரஸ்யமாக தெரிவித்தார்.

முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே காலத்தில் அணியில் சேர்ந்த பேடி அப்டன், தோனிக்கும், கும்ப்ளேவுக்கும் இருக்கும் கேப்டன்ஷிப் வேறுபாடு, தோனியின் செயல்பாடு குறித்து சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளார்.

UPTON.jpg 

பயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால் தோனியும், கும்ப்ளேயும் அளிக்கும் தண்டனை குறித்து அப்டன் சுவாரஸ்யமாதத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

நான் இந்திய அணியில் உளவியல் பயிற்சியாளராக சேர்ந்தபோது, டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு தோனி கேப்டனாகவும் இருந்தார்கள்.

நான் அணியில் சேர்ந்தவுடன் வீரர்களிடமும், கேப்டன்களிடம் கேட்டுக்கொண்டது, பயிற்சிக்கு வீரர்கள் அனைவரும் உரியநேரத்தில் வர வேண்டும். அந்த அடிப்படை ஒழுக்கம் மிகவும் முக்கியம், நம்மை நாமே நிர்வகிக்க கற்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தேன். இதைக் கேட்ட அனைத்து வீரர்களும் ஆமாம் என்று தெரிவித்தனர்.

வீரர்கள் சரியான நேரத்துக்கு பயிற்சிக்கு வருவதையும், தாமதமாக பயிற்சிக்கு வரும் வீரர்களையும் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அனைத்து வீரர்களும் ஆலோசனை நடத்திய நிலையில், அதற்கான முடிவை கேப்டன்கள் தோனியும், கும்ப்ளேயும் எடுக்கட்டும் என்று தெரிவித்தனர்.

அனில் கும்ப்ளே அணி வீரர்களிடம், பயிற்சிக்கு வரும் வீரர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். இதை அனைவரும் ஏற்றனர்.

DHONI (1).jpg 

இதைபோன்ற உரையாடல் ஒருநாள் அணிக்கான பயிற்சியின் போது ஏற்பட்டது. அப்போது கேப்டனாக இருந்த தோனியிடம், பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களை என்ன செய்யலாம், என்ன தண்டனை அளிக்கலாம் என்று கேட்டேன். அதற்கு தோனி மிகவும் சுவாரஸ்யமாக, வித்தியாசமான முடிவை அறிவித்தார். நாம் அளிக்கும் தண்டனை வீரர்களுக்கு பெரிதாகவும், ஏதாவது விளைவை உண்டாக்குவதாகவும் இருக்க வேண்டும்.

புரியவில்லை, டெஸ்ட் போட்டியில் தேர்வாகி இருக்கும் வீரர்கள்  பயிற்சிக்கு தாமதமாக வந்தால், அவர்  ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால், ஒருநாள் போட்டிக்கு தேர்வாகி இருக்கும் வீரர் பயிற்சிக்கு தாமதமாக வந்தால், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். தோனியின் இந்த ஆலோசனைக்குப்பின் ஒருநாள் அணிக்கான பயிற்சியின் போது எந்த வீரரும் தாமதமாக வந்ததே இல்லை.

தோனியின் உண்மையான பலமே அவரின் அமைதி, அடக்கம், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் விளையாடுவதுதான். வலிமையான, மிகச்சிறந்த கேப்டன் தோனி என்பதில் மறுப்பதற்கில்லை, அணிக்கு மிகவும் கடினமான நேரத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் மிகச்சரியாக இருக்கும். அதுபோன்ற நேரத்தில் மற்ற வீரர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு அமைதியாக தோனி செயல்படுவார்.

 இவ்வாறு அப்டன் தெரிவித்தார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close