[X] Close

ஹாக்கியில் இந்தியா தோல்வி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:31 am
  • அ+ அ-

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

உலக ஹாக்கி சிரீஸ் பைனல்ஸ் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு எதிராக நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய அணியை எதிர்கொண்டது.

தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் இந்திய அணி இந்த ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பிளேக் கோவர்ஸ் 15 மற்றும் 60-வது நிமிடங்களிலும், ஜெர்மி ஹேவர்ட் 20 மற்றும் 59-வது நிமிடங்களிலும் கோல் அடித்து அசத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close