[X] Close

அயல்நாடுகளில் ஒருநாள் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மென் நிலைத்து ஆடுவதற்குத் தேவை:  உ.கோப்பை ஆதங்கத்தில் புஜாரா


  • kamadenu
  • Posted: 14 May, 2019 15:26 pm
  • அ+ அ-

-பிடிஐ

சுனில் கவாஸ்கரே ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் படுமந்தமாக ஆடியவர் அதன் பிறகு வெளுத்துக் கட்டினார். ஆனால் இன்றைய தினத்திலோ யாராவது ஒரு வீரரை டெஸ்ட் வீரர் என்று முத்திரைக் குத்தி விட்டால் அவ்வளவுதான் அவர் எவ்வளவு நன்றாக குறைந்த ஓவர் கிரிக்கெட்டுகளில் நன்றாக ஆடினாலும் வாய்ப்பு கிடைக்காது.

அதுவும் கிரிக்கெட் அனைத்துமே வியாபாரம் ஆகிவிட்டதால், ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வணிகச் சக்திகள்தான் அணித்தேர்வையே தீர்மானிக்கின்றன. இந்த வணிகச் சக்தி என்ற சூறைக்காற்றில் அவ்வளவாக ‘கவர்ச்சிக் கூறுகள்’ இல்லாத புஜாரா போன்ற வீரர்கள் சுழற்றி வெளியே வீசப்படுவர்.

உண்மையில் உலகக்கோப்பை இந்திய அணியில் 4ம் இடம் பற்றிய பிரச்சினையில் புஜாரா அல்லது அஜிங்கிய ரஹானே ஆகியோரில் ஒருவர் இடம்பெற்றிருக்க வேண்டும். ரஹானேவுக்கும் அதிர்ஷ்டம் இல்லை, புஜாரா கண்டுகொள்ளப்படவேயில்லை.

சமீபத்தில் உள்நாட்டு டி20 தொடரில் சதம் எடுத்தும், உள்நாட்டு ஒருநாள் தொடரில், இங்கிலாந்து கவுண்ட்டிகளில் நன்றாக ஆடியும் புஜாரா என்னவோ இந்திய அணிக்குள் நுழைய முடிவதில்லை. ஒருநாள் போட்டி ஸ்பெஷலிஸ்ட் டெஸ்ட்டுக்கு லாயக்கில்லாமல் இருக்கலாம் ஆனால் டெஸ்ட் போட்டியில் உயர்தரபவுலிங்கை ஹை வோல்டேஜ் சூழ்நிலைகளில் ஆடும் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் சோபிக்காமல் முடிய வாய்ப்பேயில்லை.

இந்திய அணியின் ஒரு முதன்மை பேட்ஸ்மென் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக ஆடியுள்ளார், இதில் கடைசியாக 5 ஆண்டுகளுக்கு முன்பாக வங்கதேசத்துக்கு எதிராக ஆடினார்.

இந்நிலையில் தனக்கு ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பற்றி புஜாரா கூறியதாவது:

“வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட எதிர்நோக்கி காத்திருக்கிறேன், விரைவில் வாய்ப்புகள் வரும் என்றே கருதுகிறேன். நான் இதில் மேம்பாடு அடைந்து வருகிறேன், ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகவே இருக்கிறேன்.

ஒருநாள் போட்டிகளில் சீராக ஆடிவரும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் ஆடும் விதம் வெறுமனே அடித்து ஆடுவதாக மட்டுமே இருக்காது. ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வார்கள், இடையிடையே பவுண்டரி அடிப்பார்கள். இப்படித்தான் அணியின் ஸ்கோரை கட்டமைக்கிறார்கள். வெளிநாட்டு பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் ஒரு பேட்ஸ்மென் நிலைத்து ஒரு முனையில் ஆட வேண்டிய அவசியம், தேவை ஒருநாள் போட்டிகளிலும் உண்டு.

உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை. உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தால் அது ஒரு பெருமைக்குரிய கணம்தான். என் ஆட்டத்தை அதற்கேற்ப மாற்றி கொண்டிருக்கிறேன், அணியின் தேவை என்ன எங்கு நான் பொருந்துவேன் என்பதான விஷயம் இது.

உ.கோப்பை இந்திய அணி பற்றி..

நம்மிடம் பும்ரா, ஷமி,  புவனேஷ்வர் குமார் உள்ளனர். ஹர்திக் பாண்டியா 4வது பவுலராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் பந்துகள் ஸ்விங் ஆகும், ஆனால் ஒருநாள் போட்டிகளில் பிட்ச் மட்டையாளர்களுக்குச் சாதகமாகவே இருக்கும். உலகக்கோப்பையில் எதையும் முன் கூட்டியே கணிப்பது கடினம். இங்கிலாந்து சென்ற பிறகு நம்மால் கணிக்க முடியும்.

இவ்வாறு கூறினார் புஜாரா.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close