[X] Close

அஜித் வசனம் மூலம் சென்னை அணி வெற்றியைக் கொண்டாடிய இம்ரான் தாஹிர்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:10 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'பில்லா 2' படத்தில் அஜித் பேசிய வசனத்தை வைத்து, சென்னை அணியின் வெற்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடியுள்ளார் இம்ரான் தாஹிர்

12-வது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

டெல்லி அணியும், சென்னை அணியும் மோதிய இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் மோதவுள்ளது.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது தொடர்பாக சென்னை அணியைச் சேர்ந்த இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பதிவில், “எங்களோட சென்னை அணியின் ஒவ்வொரு ஐபிஎல்-லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும் ஏன் ஓவ்வொரு பாலுமே நாங்களா செதுக்கினதுடா.. எடுடா வண்டிய போடுடா விசில்” என்று தெரிவித்துள்ளார்.

நாளை (மே 12) ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. முன்பாக இந்த ஐபிஎல்லில் சென்னை - மும்பை அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close