[X] Close

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்”: ஹர்பஜன் சிங் சந்தோஷ ட்வீட்


win

  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:09 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றிருப்பதால், தனது சந்தோஷத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.

12-வது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

டெல்லி அணியும், சென்னை அணியும் மோதிய இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் மோதவுள்ளது.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது தொடர்பாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்தத்துல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு ஐபிஎல் சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை” என்று தெரிவித்துள்ளார்.

நாளை (மே 12) ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. முன்பாக இந்த ஐபிஎல்லில் சென்னை - மும்பை அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close